பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எான்க او ويلي والفرنسي ‘ஆரிய நன்று தமிழ்தி தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய அந்தண் பொதியி லகத்தியனா ரானையாற் செந்தமிழே தீர்க்கசுவா கா’’ எனவும, 'முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி-யரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்கசுவா கா” எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரன் ஒருவனைச் சாவவும் வாழவும் பாடிய மந்திரம் அங்கதப்பாட்டாயின. மேற் பாட்டுஉரை நூல் என்புழி அங்கத மென்றோதினான் இன்ன மந்திரத்தை. இஃது ஒருவனை இன்ன வாற்றாற் பெரும்பான்மையுஞ் சபித்தற் பொருட்டா கலின் அப்பெயர்த்தாயிற்று. இக்கருத்தே பற்றிப் பிறரும்? 'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்' (குறள் 28) என்றாரென்க. அங்கதப்பாட்டாயவழி அவற்றுக்கு அளவை, 'அங்கதப் பாட்டவற் றளவோடு ஒக்கும்” என மேற்கூறினானென்பது. ) لا يفته 67 ن நச்சினார்க்கினியம் : இது மந்திரச் செய்யுள் கூறுகின்றது. (இ-ள்.) சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் 1. இங்கெடுத்துக்காட்டிய இரண்டு வெண்பாக்களும் மதுரையில் தமிழ்ச் சங்கநிகழ்ச்சி என்றும்போல் இயல்பாக நிகழாதவாறு தெற்கண்வாயில் திறவாத பட்டி மண்டபத்தாரைத் திருத்தற்பொருட்டுச் சங்கப்புலவராகிய நக்கீரனார் தமிழை அவமதித்தும் வடமொழியை உயர்த்தியும் பேசிய வேட்கோக் குயக் கோடன் சாவவும் மீண்டும் உயிர்பெற்று வாழவும் பாடிய பாடல்களாகும். இவ்விரு பாடல்களுள் முரணில் பொதியின் என்ற பாடல் தமிழை இகழ்ந்த வோட்கோக் குயக்கோடன் உடனே சாமாறு சபித்துப்பாடிய அங்கதப் பாட்டாகும். 'ஆரிய நன்று என்ற் முதற்குறிப்புடைய பாடல், அறியாமையால் தவறு இழைத்து இறந்த குயக்கோடன் மீண்டும் உயிர்பெற்று வாழுமாறு பாடப்பெற்ற தமிழ் மந்திரபாடலாகும். 2. பாட்டுரை நூலே (செய். எ.கூ) என்னும் சூத்திரத்து இத் தமிழ் மந்திரத்தை அங்கதம்' எனக் குறித்தார் தொல்காப்பியர். இதுபெரும்பான்மை யும் சபித்தற்பொருட்டு வருதலின் அங்கதம் என்னும் பெயர்த்தாயிற்று.