பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "மடப்பிடியை மதவேழந் தடக்கையால் வெயில் மறைக்கும் இடைச்சுரம் இறந்தார்க்கே நடக்குமென் மனனேகாண்; இரும்பிடியை இகல்வேழம் பெருங்கையால் வெயில்மறைக்கும் அருஞ்சுரம் இறந்தார்க்கே விரும்புமென் மனனேகாண்; பேடையை இரும்போத்துத் தோகையால் வெயில்மறைக்கும் காடகம் இறந்தார்க்கே ஒடுமென் மனனேகாண்” (யாப் வி. ப. கசக) என வரும். அஃதேல் இவை மூன்றடுக்கி வருதலிற் கொச்சக வொருபோகாதல் வேண்டுமெனின், அளவடியான் வாராமையான் ஆகாதென்க.! இனி, வெண்டாழிசையாவது மூன்றடியான் வந்து வெண்பாப்போல இறும். அது. 'நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று. முனிவு செய்யார் அன்பு வேண்டு பவர்’ (யாப். வி. ப. உசச) என வரும், சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவ தனை வெள்ளொத்தாழிசை யென்ப. அது, "அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி ஒன்னார் உடைபுறம் போல நலங்கவர்ந்து துன்னான் துறந்து விடல்; ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து நீடான் துறந்து விடல்; 1. "மடப்பிடியை’ "இரும்பிடியை பேடையை" எனவரும் இவை அளவடியான் வாராமையின் கொச்சகவொருபோகு ஆகாவாயின என்பர் இளம்பூரணர்,