பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忘姆岛岛。 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "குழலிசைய வண்டினங்கள் கோளிலைய செங்காந்தட் குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ வளியவென் 9ಣ್ಣೆ மந்த கலுழ்வனபோல் நெஞ்சயர்ந்து கல்லருவி து உம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன்” (யாப். வி. ப. உ. சக) என வரும். பிறவும் வந்தவழிக் காண்க. கலித்துறையாவது நெடிலடி நான்கினான் வருவது. அஃதாவது. ஐஞ்சீரான் வருவதும், பதினாறும் பதினேழும் எழுத்துப்பெற்று நான்கடியான் வருவனவுமாம். யானுந் தோழியும் ஆயமும் ஆடுந் துறைநண்ணித் தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளுங் கைதையும் எல்லாங் கரியன்றே’’ (யாப். வி. ப. உங், உ} “நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற பொல்லா முகத்தெங்கள் போதக மேபுர மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே.” (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை.உo) இது நேரசை முதலாகிப் பதினாறெழுத்தான் வந்தது. "கனிய நினைவொடு நாடொறுங் காதல் செயுமடியார்க் கினிய னவனொரு வின்னாங் கிலமெவ ரும்வணங்கப் பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை முனிவன் சிறுவன் பெருவெங்கொல் ᏌᏞᎮ IT ©☾ முகத்தவனே' (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை. சு) இது நிரையசை முதலாகிப் பதினேழெழுத்தான் வந்தது. இனி, ஆசிரியவிருத்தமாவது அறுசீரடி முதலாகிய மிக்க அடியினான் நான்கடியு மொத்துவரும். அது