பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - எஅ ஆ இ கி. (இ-ள்.) இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்படலும் பாங்கற்கூட்டமும் தோழியிற் கூட்டமுமென்று சொல்லப்பட்ட நான்குவகையானும் அவற்றைச் சார்ந்துவருகின்ற கிளவியானும் வருவன களவென்று கூறுதல் வேதம் அறிவோர் நெறி என்ற வாறு.1 இதனுள் களவென்னாது மறையென்றதனான் இது தீமை பயச் குங் களவன்மை கொள்க.2 இன் - ஆன் பொருள்பட வந்தது. ஒடு-எண். (கன அ) களவு கற்பென்பன காமத்திணையின் ஒழுகலாறு ஆகலான் ஆண்டுப் பரந்து பட்டனவெல்லாந் தொகுத்துக் கூறுகின்றான். அவை செய்யுட் குறுப்பாயடங்கவின், அவற்றுள் இது கள வென்னுங் கைகோளுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) காமப்புணர்ச்சியும், அது நிகழ்ந்தபின்னர் 2இடந்தலைப்பாடும் அதற்குப் பின்னர்ப் போங்கற்குச் சொல்லி அவனாற் கூடுதலும், அதன்பின்னர்த் தோழியைப் பின்னின்று குறைமுடித்துக் கோடலுமென அந் நாற்பகுதிக் கண்ணும் பொருந்திய சார்பினாற் களவொழுக்கம் இதுவென்று கருது மாற்றாற் செய்யுள் செய்தல் கந்திருவ வழக்கம் (எ-று). 1. காமப்புணர்ச்சி இயற்கைப்புணர்ச்சி இடத்தலைப்படல் - இடந்தலைப்பாடு பாங்கொடுதழாஅல் - பாங்கற்கூட்டம் தோழியிற்புணர்வு - தோழியிற்கூட்டம். 2. மறை-களவொழுக்கம். களவு என்றசொல்லாற்குறிப்பிடாது மறை' எனக் குறிப்பிடுதலால் களவாகிய இவ்வொழுகலாறு ஐம்பெருங்குற்றங்களுள் ஒன்றாகிய களவு போன்று தீமை பயப்பதன்று என்பது புலனாம். களவென்னுஞ்சொற் கேட்டுக் களவு தீதென்பது உம், காமமென்னுஞ் சொற்கேட்டுக் காமந்தீதென்பதுா உ மன்று; மற்றவை நல்லவாமாறுமுண்டு; என்னை? ஒரு பெண்டாட்டி தமரோடு கலாய்த்து நஞ்சுண்டு சாவல்’ என்னும் உள்ளத்தளாய், நஞ்சுகூட்டி வைத்து. "விலக்குவாரில்லாத போழ்து உண்பல்" என்று நின்றவிடத்து, அருளுடையானொரு வன் அதனைக்கண்டு அவளைக் கானாமே கொண்டுபோய் உருத்திட்டான்: அவளும் சனநீக்கத்துக்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள். அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவளை அக்களவினான் உய்யக்கொண்டமையான் நல்லுழிச் செல்லுமென்பது. மற்று மிதுபோல்வன களவாகா நன்மைபயக்கு மென்பது' எனவரும் இறையனார் களவியலுரையை யடியொற்றியது இளம்பூரணர் தரும் இவ்வுரைத் தொடராகும்.