பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எஅரு க உரு இதனுள், ஒண்டொடி மாதர் கிழவன் எனச் செவ்வனந் தோன்றக் கூறியது தலைமகனை யாதலின், "வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேவன சிலம்பே' (குறுந்: 7) என்பது செவிலிக்குக் கண்டோர் கூறியது. (ககங்) நச்சினார்க்கினியம் : இதுவுமது. (இபள்.) ஒள்ளிய தொடியினையுடைய செவிலியோடும். தலைவனோடும், தலைவியோடும் இடைச்சுரத்துக் கண்டோர்மொழிந்தன முதனூலிற் கண்டது. எ-று. ஒண்டொடிமாதரென்றார் செல்வச்சிறப்புடைமை தோன்ற. கண்டதென மிகைபடக்கூறியவதனால், தலைவி நடைமெலிந்து அசைந்தமை கண்டாரல்லது சேர்ந்தனை செல்லென்னார் என்றும் அவ்விருவர் கூட்டத்தன்றி, தனித்துழிக் கூறாரென்றுங் கொள்க உதாரணம் முற்காட்டினாம் এ", প্রয়েঃকক ৫ : இது. கண்டோர் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. (இ-ஸ்) ஒள்ளிய தொடியினையணிந்த செவிலியோடும். தலைவனொடும் தலைவியொடும் வழியிடையே கண்டோர் உரையாடுதல் உலகியலிற் கண்ட வழக்கமாகும் என்பர் ஆசிரியர் GT-gy. ஒண்தொடி மாதர்-ஒள்ளிய தொடியினையணிந்த பெண்டிர்; என்றது நற்றாயையும் செவிலியையும் தோழியையும் என்பர் இளம்பூரணர், ஒண்டொடி மாதர் என்பதனைத் தலைவிக்கு அடைமொழியாகக் கொள்வர் பேராசிரியர். ஒண்டொடி மாதர் என்றது. செவிலியை எனக்கொள்வர் நச்சினார்க்கினியர். கண்டோர். வழியிடையே எதிர்ப்பட்டோர். 1. ஒண்டொடி மாதராவார் நற்றாயும் தோழியும் செவிலியும் என்றார் இளம்பூரணர். நற்றாயும் தோழியும் தலைமகளைத் தேடிப் புறத்தே செல்லாராதலின் ஒண்டொடிமாதர், என்றது செவிலியையே யெனக்கொண்டு நச்சினார்க்கினியர் எழுதிய இவ்வுரை முன்னிவருரையினும் சிறப்புடையதாக அமைந்துளது. கிழத்தியொடு எனப் பின்னுள்ள ஒடுவுருபினை ஒண்டொடி மாதரொடு, கிழவனொடு என முன்னரும் விரித்துப் பொருள் வரையப்பட்டது.