பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/766

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாக சு கருரு 'இவ்வகையினால் யாதானுமொரு செய்யுளாயினும் பயன்படக் கூறல் வேண்டும் என்பது கருதிப் பயன்’ என ஒருபொருள் கூறினார்’ என்பர் இளம்பூரணர். ள கூ சு. உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின்' மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும். இாைம்பூரணம் : என்-எனின் நிறுத்தமுறையானே மெய்ப்பாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) யாதானுமொன்றைக் கூறியவழி யதன் கட் பொருண்மையை விசாரித்துணர்தலன்றி அவ்விடத்து வரும் பொருண்மையானே மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப்பாடென்னும் உறுப்பாம் என்றவாறு. "ஐயோ எனின்யான் புவியஞ் சுவலே. அனைத்தனன் கொளினே அகன்மார்பெடுக்க வல்லேன் என்போற் பெருவிதுப் புறுக நின்னை இன்னா துற்ற அறனில் கூற்றே நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே”. (புறம், உருரு) இதனுள் அழுகையாகிய மெய்ப்பாடு புலப்பட வந்தவாறு கண்டு கொள்க. செய்யுட் செய்வார் மெய்ப்பாடு தோன்றச் செய்தல் வேண்டு மென்பது கருத்து. (ககூசு) இது, மெய்ப்பாட்டுறுப்புணர்த்துகின்றது. (இ - ள்.) உய்த்துணர்ச்சியின்றிச் செய்யுளிடத்துச் சொல் லப்படும் பொருள் தானே வெளிப்பட்டாங்குக் கண்ணிரரும்பன் மெய்ம்மயிர் சிலிர்த்தன் முதலாகிய சத்துவம் படுமாற்றான் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடென்னும் உறுப்பாம் (எ-று). கவிப்பொருளுணர்ந்தால் அதனானே சொல்லப்படும் பொருள் உய்த்து வேறு கண்டாங்கு அறிதலை மெய்ப் 1. தலைவருபொருளான்” என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்டபாடம். உய்த்துணர்தல்-விசாரித்தறிதல் தலை-இடம். மெய்ப்பட- மெய்ப்பாடுதோன்ற.