பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எனச் செய்யுண் முடிந்தவழியும், இவற்றான் யாங்குறையுடையேம் அல்லேமென்று தலைவற்குச் சொன்னாளேல் அது கூற்றைச்சமாம். என்னை? அவ்வாறு கூறவுஞ் சிதைந்ததின். மையின் தலைமகட்குச் சொன்னாளேல் அது குறிப்பெச்சம்: என்னை? அது காண்பாயாகிற் கானெனத் தலைமகளை இடத்துய்த்து நீக்கிய குறிப்பினளாக்கி அது தான் கூறாளாகலி னென்பது.? (உடுகள்) நச்சினார்க் திரிையம் : இது முறையே யெச்சமென்னு முறுப்புக் கூறுகின்றது. (இ ள்). கூற்றினானுங் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக். கணத்தொடு பொருந்திய கிளவி யெச்சமென்னு முறுப்பாம். எ-று முடிவுகொளியற்கையெனவே செய்யுட்கண்ணதன்றிப் பின் கொணர்ந்து முடித்தல் பெற்றாம். உ-ம். செங்களம் படக்கொன்ற ..குலைக்கா ந் தட்டே' (குறுந் -க) இக்காந்தளால் யாங் குறையுடையமல்லமெனத் தலைவற்குக்கூறிற் கூற்றெச்சமாம். அக்கூற்றுஞ் செய்யுட்குச் சிதைவின் மையின் அதுகாண்பாயாகிற் கானெனத் தலைவியை நோக்கி யிடத்துய்த்துக் கூறிற் குறிப்பெச்சமாம். அவனைக் கூடுகவெனத் தான் கூறாளாகவின்." 1. செங்களம்பட (க) என்னும் குறுந்தொகைப்பாடலில் முருகனது குன்றம் கொத்தாக அவர்ந்த செங்காந்தட்பூவின் குலையினையுடையது. எனவே, 'இப்பூக்கலால்யாம் குறையுடையோம் அல்லோம் எனத் தோழி தலைவனை நோக்கிக் கூறுதல் கையுறைமறுத்தல்' என்னுந் துறையின்பாற் படுதலால் இங்ங்னம் தோழி வெளிப்படக் கூறினாளென்றல் குற்றமாகாமையின் இது கூற்றெச்சமெனப்படும் s 2. இங்ங்னம் தோழி தலைவியை நோக்கிக் கூறினாள் எனக்கொள்ளின், 'செவ்வேள் குன்றம் குலையாக மலர்ந்த செங்காந்தட்பூக்களாற் பொலிவு பெற்றுளது. அக்காட்சியைக் காண விரும்பினை யாயின் ஆண்டுச் சென்று காண்டாயாக!' எனத் தலைமகளைக் குறியிடத்து உய்த்தல் என்னுந்' துறை பில் தனது குறிப்பினைப் புலப்படுத்துதலால் அது குறிப்பெச்சமெனப்படும். 3. இவ்வுரைப்பகுதி பேராசிரியர் உரையினையே முழுவதும் அடியொற்றி யமைத்துள்ளமை காண்க.