பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உளச #s; ଈ ? உளச. 'வண்ணத் தாமே நாலைந் தென்ப, இளம்பூரணம் : என்.எனின். இனி நிறுத்தமுறையானே வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ன்.) வண்ணமாவன இருபதாம் என்றவாறு. அவற்றின் பெயர் வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும். (உ0*} Ga e g ir strífug grib : இது, முறையானே ஈற்றுநின்ற வண்ணம் இத்துணைப் பகு தித் தென்கின்றது. (இ. ஸ்). வண்ணம் இருபது வகைப்படும் (எ-று). வண்ண மென்பது, சந்தவேறுபாடு. நூறும் பலவுமாகி வேறுபடினும் அவை ஈண்டடங்குமென்பது உம், அவ்வேறுபாட் டானெல்லாஞ் சந்த வேற்றுமை செய்யா வென்பது உங் கூறிய வாறு. அது நுண்ணுணர்வுடையார்க்குப் புலனாமென்பது.? (உக உ) நச்சினார்க்கினியம்: இது முறையே வண்ணம் இத்தனை பகுதித்தென்கின்றது. (இகள்). வண்ணந்தாம் இருபதென்று கூறுவர் புலவர்.(எ.நூ) தானேயென்றார், அவை நூறும் பலவுமாக வேறுபடக்கொள்ளினும் இவ்விருபதின்கண்ணே யடங்கும் வேறு சந்தவேற்றுமை செய்யாவென்றற்கு. அது நுண்ணுணர்வுடை. யோர்க்குப் புலனாமென்றுணர்க.3 1. வண்ணந்தானே என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளிற் காணப்படும் பாடம். வண்ணமாவது. எழுத்துவகையான் ஆமையும் சந்தக் கூறுபாடு. நாலைந்து-இருபது. 2. வண்ணம் நூறும் அதற்குமேலும் என்போர் யாப்பருங்கலவஈசிரியர் முதலியோர். அன்னோர் கூறும் வண்ணங்கள் யாவும் ஆசிரியர் தொல். காப்பியனார் கூறிய இருபது வண்ணங்களுள் அடங்கும். அன்றியும் அன்னோர் கூறும் வண்ணங்கள் இவ்விருபது வண்ணங்களைப் போன்று சந்தவேறுபாடு செய்யமாட்டாவாதலின் அவர் கூறும் வண்ணப்பகுப்பினாற் பயன் சிறிதுமில்லை யென்பது நுண்ணுணர்வுடையார்க்கு நன்கு புலனாம் என்பதாம், 3. பேராசிரியர் கருத்தும் இதுதே என்பது முன்னர் விளக்கப்பூட்டது.