பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உஉ.உ க00ரு உ.உ.உ. துங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். இனம் பூர ைம் : என்-எனின். தூங்கல் வண்ணம் உணர்த்துதல் துதலிற்று. (இ-ள்.) தூங்கல் வண்ணமாவது வஞ்சியுரிச்சீர் பயின்று வரும் என்றவாறு.1 (உ-ம்) "வசையில் புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும்” (பட்டினப். க) எனவரும். (உ.உ.உ) (இ-ள்). துரங்கல்வண்ணத் துரங்கலோசைத்தாகி வருவது (எ-று). வஞ்சியென்பது, வஞ்சித்துக்குப்போல இதுவும் அற்றுச் சேறலுடைத்தென்பது.? அது, “யானுரடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானுரட யானுணர்த்தத் தானுணர்ந்தான்' (முத்தொள்ளாயிரம்: 104) என நின்ற தொடர்நிலைக்கண்ணே அத்துங்கல் கண்டுகொள்க. இக்கருத்தறியாதார் கலிப்பாவினுள் வஞ்சிப்பாப் பிறக்குமென வும் வஞ்சியுட் கவிப்பாப் பிறக்குமெனவும் மயங்கு.ப. (உங் C) நச்சினார் க்தி ரிையம் : இது தூங்கல்வண்ணங் கூறுகின்றது. (இ-ஸ்.) தூங்கல்வண்ணமாவது துரங்கலோசைத்தாகி வரும் எ-று: 1. வஞ்சிப்பாவிற்குரிய தாங்கலோசையமையவரும் ஒசைத்திறம் தூங்கல் வண்ணமாகும். 2. இங்கு வஞ்சியென்றது, வஞ்சிப்பாவினையன்றி வஞ்சிப்பாவுக்குரிய துரங்கலோசையினை யுணர்த்தியதாகக் கொண்டார் பேராசிரியர். 3. இங்ங்னம் மயங்கிக் கூறுவார் இன்னாரென்பது நன்கு புலப்படவில்லை. 4. துரங்கல் வண்ணம் என்பது, பெரும்பான்மையும் வஞ்சி பயின்று வருவது' என்பர் யாப்பருங்கல விருத்தியாசிரியர்.