பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/844

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உங்க 占C皮五 பேராசிரியம் : இது புலனாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ, ள்) சேரிமொழியென்பது பகடிமாற்றங்கள். அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப்’ பொருட்டொட்ரானே தொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர் (எறு). அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய, நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வனவென்பது கண்டு கொள்க. ఇ • ,冷 (உச க} நச்சினார்க்கினியம் : இது புலன் கூறுகின்றது. (இ.ஸ்). பாடி மாற்றங்களானே செவ்விதாகக் கூறப்பட்டு ஆராய்ந்து காணாமை பொருள் தானே.தோன்றச்செய்வது புலனென்று கூறுவார் அறிவறிந்தோர். எறு." அவை விளக்கத்தக்கூத்து முதலிய வெண்டுறைச்செய்யுளென்று கொள்க. ஆய்வுரை : இது, புலன் என்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ.ஸ்) பலருக்கும் தெரிந்த வழக்குச் சொல்லினாலே செவ்விதாகத் தொடுக்கப்பட்டுக் குறித்த பொருள் இதுவென ஆராய வேண்டாமல் தானே விளங்கத் தோன்றுவது புலன் என்னும் வனப்புடைய செய்யுளாம் என்பர் இலக்கண நூலுணர்ந்த ஆசிரியர்கள் எ-று. “அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன” என்பர் போரசிரியர். 1. பாடிமாற்றங்கள் - சிற்றுார்ப்பேச்சு வழக்கு; இதனைக் கிராமிய வழக்கு என்பர் இக்காலத்தார். 2. ஆராய்ந்து காணாமற் பொருள் எளிதில் விளங்கும்படி. ஐ. விளக்கத்தார் கூத்து' என்பது பேராசிரியர் காலத்து வழக்கிலிருந்த நாடகச் செய்யுள் நூலாகும். இது எல்லார்க்கும் பொருள் இனிது புலனாக நாடகத் தமிழுக்குரிய வெண்டுறைச் செய்யுட்களால் இயன்றமையின் புலன்' என்னும் வனப்பிற்கு இலக்கியமாயிற்று.

  1. . gರ್a್ರ என்பது, இயற்சொல்லாம் பொருள் தோன்றச் செய்யப்படும்

பாட்டு' என்பர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர்.