பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ! தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இனி “இயைதல்' என்பது அசைவகை ஒன்றொன்றனோடு தொடர்ந்தவழி யல்லாற் சீர்க்கு அலகுபெற லாகாதென்றவாறு; எனவே, அவ்வாறு இலயம்பட நின்றனவாயினும் புணர்ச்சியெய்து மென்பதாம். மற்று, 'இற்றது’ என்றதென்னை ? சீரென்பது தொழிற் பெயராதலால் அது, “சீரியைந்து' எனவே, பெறுதுமெனின், அங்ங்ணங் கொள்ளிற் சீரியைந்த தொடரெல்லாங் கூடி ஒரு சீராவான் செல்லுமாகலின் இடை யிடை இற்றுவரல்வேண்டு மென்றற்கு அங்ங்னங் கூறினா னென்பது; இதனானே? ஒரோவழிப் புணர்ச்சிவிகாரம் எய்தாமை யுங் கூறினானாம்.3 “வண்டுபடத் ததைந்த கண்ணி” (அகம். 1) என்புழி, வல்லெழுத்துமிக்க புணர்ச்சிவகையானே சீரியைந்தன. பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து’ என்றவழி ஒன்றோடொன்று தொடர்ந்ததேனும் இற்றதென்பதனான் இறுதிபட நின்றமையின். "எல்லா விறுதியும் உகர நிறையும்’ (தொல், எழுத். 408) என்றதனாற் குற்றுகர முற்றுகரமாகாது நாலெழுத்தடியாயிற்று. இதனை, எழுத்தடியென்றலே வலியுடைத்து; வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரத்தால் நாலெழுத்தடி வேறுண்மையின். 'ஈரசை கொண்டும்' எனவும், 'மூவசை புணர்ந்தும்' எனவுங், கூறினமையான் ஒருசீர் பலசொல் தொடர்ந்துவரினும் 1. ஓரடி யிற் பல சீர்கள் இயைந்துவருவன வாயினும் அவை ஒவ்வொன்றும் தாள வறுதிபட முடிந்து நிற்பன என்பார் , சீர் இயைந்து இற்றது சீர்' என்றார். இறுதல் முடிதல். 2. இதனானே இவ்வாறு ஒவ்வொரு சீரும் முடிந்து நிற்றலாலே. 3. சொற்கள் தம்முட்கூடிச் சீர்களால் தாள அறுதிபடப் பிரிந்து நிற்கும் எனவே அவை எழுத்ததிகாரத்திற் கூறப்பட்ட புணர்ச்சிவிதிகளைச் சிலவிடங்களில் எய்தாமையும் உண்டு என ஆசிரியர் கூறினாராயிற்று என்பதாம்.