பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இனி வஞ்சிப்பாவினுள் வந்த ஆசிரிய அடியினை நாலசைச் சீர் காட்டல் வேண்டுவார் இருசீரடியாக உரைப்பினும் அவை துரங்கலோசையிலவாகலானும் அவை சீரியைந்திறுத வின்மை யானுங் கொள்ளானென்பது. ஈண்டு எனப்படு மென்பதே பற்றி நாலசைச்சீர் கொண்டாரும் உளர். ஐயசைச்சீர் கொண்டாரைக் கண்டிலமென்க.1 நச்சினார்க் திரிையம் : இது நிறுத்தமுறையானே சீருணர்த்துவான் றொடங்கி அவற்றின் பகுதியும் அவற்றது பொதுவிலக்கணமும் உணர்த்திற்று. (இ - ள்.) ஈரசை யியைந்துகொண்டும் எ-து ஈரசை தன்னில் இயைந்து பொருள்கொண்டும். மூவசை யியைந்துகொண்டும் எ-து மூவசை தன்னிலியைந்து பொருள்கொண்டும். இற்றது சீரெனப்படும் எ-து அற்று நிற்பது சீரென்று சிறப்பித்துச் சொல்லப்படும். சீர்புணர்த்தும்? சீரெனப்படும் எ-து அவ்வாறன்றி அச்சீர்தான் ஒருசீரோடொருசீர் தொடரப் பிறர் கூட்டப்பட்டு நின்றாலுஞ் சீரென்று சொல்லப்படும் என்றுங் கொள்க. எ-று. "இயைந்து என்றதனையும் கொண்டு என்றதனையும் ஈரசைக்கும் மூவசைக்குங் கூட்டிக், கொண்டு’ என்பதற்குப் பொருள்கொண்டு என்று பொருளுரைக்க. நடுவுநின்ற சீர்' என்றதனைப் ‘புணர்த்தும் என்றதனோடு மாறிக்கூட்டுக. இயைந்து என்றதனான். ஒருசீர்க்கட் பலசொற்றொடர்ந்து 1 . யாப்பருங்கலவுரையாசிரியர், “நின்று நின்றுளம் தினைபு தினைவொடு எனவரும் பாடலைக் குறளடிவஞ்சிப்பாவாகக்கொண்டு அதன்கண் நாலசைப் பொதுச்சீர் எட்டும் வந்தன எனக்குறித்துள்ளார், இங்கு நின்று நின்றுளம் நினைபு நினைவொடு என நாற்சீரடியான் இயன்ற ஆசிரிய அடியினை நாலசைச்சீர் வேண்டுவோ இ சீரடியாகவுாைப்பினும் அவை இரு சீராய் இயைந்து முடியாமையானும் அங்ங்னம் இருசீரடிகளாகப்பகுத்துரைக்குமிடத்து அவை வஞ்சிப்பாவிற்குரிய துங்கலோசையினவாய் வாாாமையானும் அவை இருசீரடியாகச் சீர் இயைந்து முடியாமை. யாலும் நாலசைச்சீர் கோடல் பொருந்தாதென்பதாம். 2. புணர்த்தும்' என இளம்பூரணர் கொண்ட பாடமே நச்சினார்க்கினியரும் கொண்டார். புணர்ந்தும்' என்பது பேராசிரியர் கொண்ட பாடமாகும். 3 இயைதல்’ என்றது, ஈரசையும் மூவசையுமாகச் சொற்கள் ஒன்றுபட்டுப் பொருத்தி நிற்றல்,