பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரையியல் 9 5 எ.க. நூலே கரகம் முக்கோல் மனையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய, இளம்பூரணம் : (இ~ள்) நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆரா யுங்காலத்து அந்தணர்க்கு உரிய என்றவாறு. இஃது உயர்தினை நான்குசாதியும் பற்றிய மரபு உணர்த்து வான், முறையானே அந்தணர்க்குரிய மரபுபட்டுவருங் கலப்பை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) முந்நூலுங் குண்டிகையும் முக்கோலும் யாமை மணையும் போல்வன அந்தணர்க்கு உரிய (எ-று). 'ஆயுங்காலை யென்றதனாற் குடையுஞ் செருப்பும் முதலா யினவும் ஒப்பன அறிந்துகொள்க. உதாரணம் : ' எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடை நீழ லுறித்தாழ்ந்த கரகமு ரைசான்ற முக்கோலும்' (கலி : 6) எனவும், “ தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப் படிவ வுண்டிப் பார்ப்பன மகனே' (குறுந் : 156) எனவும் வரும். இன்னும் ஆயுங்காலை யென்றதனான், ஒருகோலுடை யார் இருவருளர்; அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் கரகம்-கமண்டலம். முக்கோல் - முத்தொழில்களைச் செய் யும் அயன் அரி, அரன் என்னும் மூவரும் ஒருவரே என்னும் உண்மையினை வற்புறுத்தும் அடையாளமாகவுள்ளது முக் கோல்களாகும். இவ்வுண்மை, உரைசான்ற முக்கோலும்' எனவரும் கலித்தொகை தொடருக்கு, அரி, அயன் , அரன் என்னும் மூவரும் ஒருவரென்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோலையும் என நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் இனிது புலனாதல் காணலாம். மணை-ஆசனம்.