பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ } {} தொல்காப்பியம் எது . மெய்திரி வகையின் எண் வகை உணவின் செய்தியும் வரையார் அப்பா லான. இளம்பூரணம்: (இ-ள்) எண் வகை உணவாவன: நெல்லு, காணம், வரகு, இறுங்கு, திணை. சாமை, புல்லு, கோதும்பை இவையிற்றை உண்டாக்குகின்ற உழவுத்தொழிலும் வாணி கர்க்கு வரையா ரென்றவாறு. இன்னும் வணிகர்க்கே உரிய தொழில் கூறுகின்றது? (இ-ஸ்) பொருள் தெரிந்த வகையான் எண்வகைக் கூலமுஞ் செய்யில் விளைத்தலும் அவர் கடன் (எ-று). அவையும் அவர் பண்டத்தோடு உபகாரப்படுமாகலின் வரையப்படாதென்றானென்பது. எண்வகையுணவென்பன பயறும் 2உழுந்துங் கேடுகுங் *கடலையும் எள்ளுங் கொள்ளும் 7.அவரையுந் துேவரையு மாம். ஆய்வுரை : இது, வணிகர்க்கேயுரிய தொழில் கூறுகின்றது. (இ~ள்) பொருள் தெரிந்த கூறுபாட்டால் எண்வகை கூலங் களாகிய உணவுப் பொருள்களை விளைவிக்கும் உழவுத்தொழி லும் வணிகராகிய அவர்க்கு விலக்குதற்குரியதன்று எறு. உணவுப்பொருள் முதலாயினவற்றைக் கொண்டுவிற்குத் தொழிலேயன்றி அவ்வுணவுப் பொருள்களை விளைவிக்கும் உழவு தொழிலும் வணிகர்க்கு உரியது என்பதாம். செய்தி - தொழில் என்றது. இங்கு உழவுதொழிலை, எண்வகை உணாஆவன : நெல்லு, காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, 1. இவை எண்வகைக் கூலம் எனவும் வழங்கப்படும். 2. எண்வகைக்கூலமும் உழவர்க்கு மிகுக' என்றதனால் எண் வகைக் கூலங்களையும் விளைவித்தல் உழவர்தொழில் ஆத லின், இதனை வணிகர்க்கேயுரிய தொழில் எனக்கூறுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை,