பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰2叠 தொல்காப்பிகம் அக, இலையே முறியே தளிரே தோடே சினையே குழையே ஆவே அரும்பே நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்! மரனொடு வரூஉங் கிளவி என்ப*. இளம்பூரணம்: (இ-ள்) இலை முதலாகச் சொல்லப்பட்ட உறுப்புப் பெயர்? மரத்துக்கு அங்கமாம் என்றவாறு, இதனானே புறவயிர்ப்பும் உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒருசாரன இவ்வுறுப்புப்பெயர் உடையன மரமெனப்படுமென்று கொள்க. அவையாவன: முருக்கு தணக்கு முதலாயின. பேராசிரியம் : இஃது அகக்காழனவற் றுறுப்பினைச் சொல்லும் மர புணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) எண்ணப்பட்டனவும் பிறவுமெல்லாம் மரத்துறுப் பினைச் சொல்லும் வாய்பாடு (எ-று). அனையவை யெல்லாம் என்ற புறநடையானே புல்லுந் தலையும் பொங்கரும் முதலாயின கொள்க. அவை, 'தெய்வ மடையிற் றேக்கிலை குவைஇ' - (பெரும்பாண் ; 104) எனவும், - 'முறிமே யாக்கை' (பத்துப்-மலைபடு : 313), எனவும்,

  • இச்சூத்திரம் அகத்தே வயிரமுடைய மரவுறுப்புக்களின் மரபுப்

பெயர்களை உணர்த்துகின்றது. 1. நனையுள்ளுறுத்த அனையவை யெல்லாம் - என்பது பேராசிரி யருரையிற் கண்ட பாடம். 2. பிறப்புமுறையால் தளிரை முற்கூறாது இலையை முற்சு றியது புல்லினுள் ஒரு சாரண இலையெனவும் பூவெனவும் வழங்கும் என அதிகாரங்கோடற்கு என்பர் பேராசிரியர்.