பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 量3登 மற்று இரண்டாமெண்ணுமுறைமைக்கனின்ற நூலினையே வழிநூலெனக் கொண்டு மூன்றாவது தோன்றிய நூலே சார்பு நூலாகாவும் அதன்பின்னர் நூல் செய்யப்பெறாரெனவும் கொள் ளாமோ லெனின்,முதனூலிற் கிடந்த பொருளை ஒர் உபகாரப்பட வழிநூல் செய்த ஆசிரியன் செய்தக்காற் சார்புநூலெனப் பின்னர் ஒர் ஆசிரியன் நூல் செய்ததனாற் பயந்ததென்னை யென்க. என் றார்க்கு, வழிநூலும் பிற்காலத்தரிதாமாயின் அதனையும் எளி தாகச் செய்தலன்றே இதனாற் பயந்ததெனின், அதுதானும் பின் னொருகாலத்து அரிதாமாயின் அதனையும் எளிதாக செய்வானல்ல னோவென்று மறுக்க இவ்வாராய்ச்சி வேண்டா வென்றற்கன்றே இவ்விருவகையானும் வருதலே மரபென்பானாயிற்றென்றொழிக. ஒன்றன்வழியேயன்றியுந் தாந்தாம் அறிந்தவாற்றானும் நூல் செய்யப் பெறாரோவெனின்,-அது-மரபன்று: அது நோக்கியன்றே, 'மரபுநிலை திரியிற் பிறிது பிறி தாகும்' (646) என்றவிதி நூலிற்கும் எய்துவித்துப் புகுந்ததென்பது; என்னை? பிறிது பிறி தாகுமாறெனின்,-ஒரு பொருட்கண்ணே மாறுபட்ட இலக்கணங் கூறின் அவ்விரண்டும் அதற்கிலக்கணமாகாது; என் போல? மாணிக்க மணியினைச் செல்வண்ணம் முதலாயின சில இலக்கணங்கூறிய நூல் கிடப்பக் கருவண்ண முதலா யினவும் அதற்கிலக்கணமென்று ஒருவன் எதிர்நூலென்ய தோர் நூல் பிற்காலத்துச் செய்யுமாயின் அஃது அதன் இலக் கணமெனப் படாதாகலானென்பது.2 1. முதல் நூலிற் கூறப்பட்டபொருளைப் பின்னர் ஒர் உபகாரப் பட ஒர் ஆசிரியன் வழிநூல் செய்தக்கால் அதனையடியொற்றிச் சார்புநூல் என ஒருவன் நூல் செய்ததனாற் பயன்யாது?என வினவினார்க்கு, வழிநூலும் பிற்காலத்து அருமையுடைய தாயின் அதனையும் எளிதாகச் செய்தலே பயன் என விடை கூறுவர் பேராசிரியர். - 2. எதிர் நூல் என்பதும் ஒன்றுண்டு. அது யாரோ முதனுாலின் முடிந்த பொருளை ஒருவன் யாதானும் ஒரு காரணத்தால் பிறழவைத்தால், அதனைக் கருவியால் திரிவு காட்டி ஒரு வாகை வைத்ததற்கு ஒள்ளியான் ஒரு புலவனால் உரைக்கப் படுவது; என்னை? தன்கோள் நிறீஇப் பிறன்கோன் மறுப்பது எதிர் நூல் என்பர் ஒருசாராரே என்றாராதலின்’ எனவரும் இறையனார் களவியலுரை இங்கு நினைக்கத் தக்கதாகும்.