பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபிகல் i53 ஆய்வுரை : இது, வழிநூல் வகையினை விரித்துரைக்கின்றது. (இ-ன்) முதல்நூலில் விரிந்துபரந்த பொருள்களைத் தொகுத்துக் கூறுவதும்,தொகுத்து சொல்லப்பட்டவற்றைவிரித்து விளக்குவதும், தொகுத்துரைத்தலும், (வடமொழி முதலிய) பிறமொழி நூல்களை அடியொற்றி அதன்வழியே மொழிபெயர்த் துரைப்பதும் என வழிநூல் நான்குவகைப்படும் எ-று. இம்மரபியற் சூத்திரத்தினை அடியொற்றியமைந்தது, தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப் பெனத்தகு நூல்யாப் பீரிரண் டாகும்'(நன்னூல்-பாயிரம் 49) என நன்னூலுரையில் மயிலைநாதர் மேற்கோளாக எடுத்துக் காட்டிய பழஞ்சூத்திரமாகும். (கூகம்) கoo. ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின் முப்பத் திருவகை உத்தியொடு புனரின் நூலென மொழிய துணங்குமொழிப் புலவர்: இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். நூற்கு இலக்கணம் உணர்த் துதல் நுதலிற்று. 'இ-ன்) இனி, ஒத்த சூத்திரத்தானும், காண்டிகையானும் பொருண்மேற் கூறிய வகையுடைத்தாகிப், பத்துக்குற்றமும் இன்றி, நுண்ணிதாகிய முப்பத்திரண்டு வகைப்பட்ட தந்திரவுத்தி யோடு புணருமாயின் நூலெனச் சொல்லுவர் புலவர் என்றவாறு. உரைப்பின் என்பதனை முன்னே கூட்டி நூலுரைப்பின் எனப்பொருளுரைக்க. அவையாமாறு முன்னர்க் காட்டுதும். 1. தொல் செய்யுளியல் 159முதல் 165வரையுள்ள சூத்திரங்களில் ஆசிரியர் தொல்காப்பியனார் நூலின் இலக்கணங்களை விரித்துக் கூறியுள்ளார். அவ்விலக்கணத்தினையே இங்கு மரபியலிலும் கூறினாரென்றால் பொருந்துமா? ஆராய்க. எனவே தொல்காப்பியனர் காலத்திற்குப் பின்னர் இயற்றப் பெற்றவையாதல் வேண்டும்.