பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 5 மரபியல் i தானும் அக்காண்டிகையின் மெய்ப்படக்கிளந்ததே யாகலின் அவ்விரண்டுஞ் செய்யுளியலுட் கூறிவந்த உரைவிகற்பமே யென்பதுணர்த்தியவாறு, அஃதேற் காண்டிகையென்றாற் போல இதற்குப் பெயர் வேறு கூறானோவெனின், வேண்டியார் வேண் டியவாறு. - 'மறுதலைக்கடாஅ மாற்றமும்' (தொல்-மர ; 104) எல்லையின்றி இகந்துவருவனவெல்லாம் உரையுள் எழுதப்படாமை யின், அதுவுங் காண்டிகைப் பகுதியேயென்பது அறிவித்தற்கு வேறுபெயர் கூறாது மெய்ப்படக் கிளந்த வகை யென்றே போயினானென்பது. மற்று இல்லதற்கும் இலக்கணஞ் சொற்லுவார்போல ஈரைங்குற்றமுமின்றி யென்றதென்னையெனின், அவற்றை எதிர் மறுத்துக்கொள்ளும் பத்துவகைக் குணமுங் கோடற்குத் தந்து கூறினானென்பது. அவை, 'எதிர்மறுத் துனரின் றிறத்தவு மவையே” (தொல்-மர : 109) என்புழிச் சொல்லுதும். அல்லது உம் இவை கூறியவதனானே பிறிதொரு பொருள் கொள்ளப்படும் இடங்களும் உள; அவை நோக்கி அங்ங்னங் கொள்ளாதனவுந் தொகுத்து உடன்கூறினா னென்பது. அவையும் அவற்று விரிச்சூத்திரத்துட் கூறுதும். ஈரைங்குற்றமு' மென்ற உம்மையை எச்சப்படுத்துப் பிறவுங் குற்றம் உளவென்பதுங் கொள்க. அவை முதனூலோடு மாறுகோடலும் யாப்பினுட் சிதைதலும் போல்வன. அவை முன்னர்ச் சொல்லும், நேரிதினென்றதனான் முதல்வன் செய்த நூலாயினும் வழி நூலாயினும் அவ் வழிநூலின் முழுவது உந் தெரிந்துனரும் நுண்ணுணர்வினார்க்கே முப்பத்திருவகை உத்தியும் புலனாவ தெனக் கொள்க. அவையும் முன்னர்ச் சொல்லும். வகை யதாகி'யென்பது புணரினென்பதனோடு முடிந்தது. (புணரி னென்பது மொழிப'வென்பதனோடு முடிந்தது.) ஒத்த சூத்திரத்தினை உரைநடாத்தல் வேண்டிற் காண்டி கைப் பொருளினை விளங்கச் சொல்லும் உரைவிகற்பத்ததாகி யெனவே சூத்திரமுங் காண்டிகையும் உரையுமென மூன்றும்