பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்


------------- _

குத்து விரித்துக்கூறும் உரைவிகற்பம் போன்று சூத்திரப் பொருள் விரிந்து தோன்றும்படியாத்த சூத்திரப் பொருளை முடித்து பாருட்டுக் காரணத் தொடரை எடுத்துக்கூறும் குரிய எடுத்துக் காட்டாகிய உதாரணத்தாலும் ஆசிரியன் தான் விரும்பிய வண்ணம் பொருந்தி நெறியையுடையது அக்காண்டிகை எ-று. ப் --- என்றது, பதப்பொருளைத் தொகைநிலை

  • سمسم مسسي تقع يبعد ما....،

w ! - .ே ே .ெ to . . . . - - நாற்பகுத்து, இஃது இன்ன வேற்றுமைத் ன பயனிலைத்தொடர் என்றாற் போலச் பயனிலை மு: தொடர் இஃது சூத்திரச் சொற்பொருளை விரித்துக் கூறும் முறையில் அமைந்த அகலவுரையினை, அவ்வுரையின் இயல்பு அடுத்த நூற்பாவில் விரித்துரைக்கப்படும். இங்குக் கூற எடுத்துக்கொண்ட அகலவுரை போன்று பொருள் தானே விரிந்து தோன்றும்படி தொடர்ப் பொருளைப் பகுத்துரைக்கும் தன்மையது என்பார் , விட்டு அகல்வு இன்றி விரிவொடு பொருந்தி' என்றார். விடுதல் - பதப்பொருளைப் பிரித்துரைத்தல். இது கண்ணழித்தல் எனவும் வழங்கப்படும். அகல்வு-பொருள் அகலமுடையதாய் விரிந்தமை தல். விட்ட கல்வு இன்றி. எனவே, சூத்திரம் கூறும் பொருளைத் தொகுத்துக்கூறி முடிப்பதல்லது சூத்திரத்திலுள்ள சொல்லா ராய்ச்சியும் எழுத்தாராய்ச்சியும் முதலாக அறிய வேண்டுவன வெல்லாம் இக்காண்டிகையில் இடம் பெறா என்றாராயிற்று. o இங்குக் காண்டிகை என்றது, சூத்திரத்து உட்பொருளைக் கற்போர் எளிதிற் கண்டுணரும் முறையில் வரையப்படும் பொழிப்புரை இது, பிண்டப் பொழிப்பும் கண்ணழித்துரைக்கும் பொழிப்பும் என இருவகைப்படும். அவற்றுள் பிண்டப் பொழிப் பாவது சூத்திரப்பொருளைத் தொகுத்து வரைவது, கண்ணழித் துரைக்கும் பொழிப்பாவது சூத்திரப் பொருளைத் தொகுத்து வரைவது, கண்ணழித்துரைக்கும் பொழிப்பாவது பொருள் நிற்கும் சொற்றொடரைப் பொருள் வகையாற் பகுத்தெடுத்துப் பொருள் கூறுவது இதனை வார்த்திகம் என்பர் வட நூலார். மெய்கண்டார் தாம் இயற்றிய சிவஞான போதத்திற்கு வார்த்திகம் என்னும் இப்பொழிப் புரையினை வரைந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். இங்ங்ணம் (பிண்டப் பொழிப் பும் வார்த்திகப் பொழிப்பும் எனப்) பொழிப்புரை இருவகைப் படும் என்பது,