பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரபியல் 露75 படுத்திய ஆசிரியர் , அவ்விருவகையுடன் சூத்திரப் பொருளொடு தொடர்புடையனவாய் இன்றியமையாது கொணர்ந்துரைத்தற் குரிய எல்லாப் பொருள்களையும் கூட்டியுரைப்பது உரையெனச் சிறப்பித்துரைக்கப்படும் என்பதனை இச்சூத்திரத்தால் தெளிய விளக்கினார். எனவே, சூத்திரப் பொருளை விளக்குமளவில் நின்று விடாமல் அப்பொருளோடு தொடர்புடைய எல்லாப் பொருள் களையும் கொணர்ந்துரைக்கும் உரையே அகலவுரையெனப்படும் என்பது புலனாம். எழுத்தும் சொல்லும் பற்றி ஆராயும் ஆராய்ச்சியும் இவ்வுரையில் இடம்பெறும் என்பார், இன்றிய மையாது இயைபவையெல்லாம் ஒன்றவுரைப்பது உரையெனப் படும்’ என்றார். இவ்வுரை அகலவுரை எனவும் விருத்தியுரை யெனவும் வழங்கப்பெறும். (ණිෆL) கoசு மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த் தன்னு லானும் முடிந்த நூ லானும் ஐயமு மருட்கையுஞ் செவ்விதின் நீக்கித் தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளிஇத் துணிவொடு நிற்றல் என் மனார் புலவர். இளம்பூரணம் : இதுவுமது. (இ-ன்) உரையாவது, மறுதலைக்கடாஅ மாற்றமு முடைத்தாக' ஐயப்பட்டு நிற்றலு மருண்டு நிற்றலு நீக்கி, தன் னுாலானாதல், அப்பொருண் முடிவுறக்கூறின நூலானாதல் தெளிய வொரு பொருளை யொற்றுமைப்படுத்து, இதுவே பொருளெனத் துணிதல் உரையிற் கியல்பென்றவாறு, மாற்றமுமுடைத்தாகி யென்றவும்மையால் விடையுமுடைத் தாகி யென்க. பேராசிரியம் : இதுவுங் காண்டிகைபோல உரையும் இருவகைத்தென்பது அறியுமாற்றான் எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்மறுதலை மாற்றத்தினை இடைசெறித்துக் கடாவுதலும் அதற்கு மறுமாற்றமாகிய விடை கூறுதலும் உடைத்தாய்: தன் நூலா னும் - உரையெழுதுவானாற் கூறப்படுகின்ற உரை தனக்கு