பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் t 8:3 பெயர்த்துச் செய்யவேண்டும் பொருளிலவாகலானும், பிற பாடைக்கும் பொதுவாயின பொருளவாயின் அவையுந் தமிழ் வழக்கு நோக்கியே இலக்கணஞ் செய்யப்படுமாகலானும், அவர்க், கும் மொழிபெயர்த்தல் வேண்டுவதன்றாகலின் அதுவே ஒழிக்கப் படும். இக்கருத்தினானன்றே, . . ' வழியி னெறியே நால்வகைத் தாகும்' . (தொல். மர 196) என வழிநூலையே விரித்து நால்வகை யாப்பிற்கும் உரிமை கூறியதென்பது.1 அங்ங்ணம் முதனுாற்கு மொழிபெயர்த்தவின் மையின் யாப்பொன்றும் பற்றிச் சிதைவுபிறவாது, ஒழிந்தன பற்றி வழிநூற்குச் சிதைவுண்டாமென்பது கருத்து. . . . வல்லோன் புணரா வாரம் போன்றே - வாரம் புணர்ப்பான் வேறொருவனாயவழி முதற்கூறு புணர்ந்தாற் புணர்ந்தவாற் றோடு பொருந்தச் செய்யாதவாறுபோல (எ-று). வாரமென்பது கூறு: என்னை? ஒரு பாட்டினைப் பிற் கூறுசொல்லுவாரை, . வாரம் பாடுந் தோரிய மகளிரும்' - (சிலப் 14: 55) என்பவாகலின், 1. தமிழகத்தில் வழக்குஞ் செய்யுளுமாகிய இருவகை வழக்கிற் கும் முதனுாலாகிய அகத்தியத்துள் வடமொழி முதலிய பிற மொழிகளினின்றும் மொழி பெயர்த்துச் சேர்க்க வேண்டிய பொருள் எவையும் இல்லையாதலாலும் பிறமொழிகட்குப் பொதுவாயின மொழியிலக்கணங்களாயின் அவையும் தமிழ் வழக்கு நோக்கியே இலக்கணம் கூறப்படும் ஆதலாலும் முத னூலாசிரியராகிய அகத்தியர்க்கு மொழிபெயர்த்தல் வேண்டுவ தன்று. எனவே மொழி பெயர்த்தல் யாப்பு முதனூலாசிரி யர்க்கு இல்லை. இக்கருத்துப் பற்றியே வழிநூலையே நால் வகை யாப்பிற்கும் உரியதாகக் குறித்தார் ஆசிரியர். முத னுாலுக்கு மொழி பெயர்த்தல் யாப்பு இல்லாமையால், மேற் குறித்த யாப்பு வகைபற்றிச் சிதைவுண்டாதல் இல்லை. முதனூலின் வழி இயற்றப்படும் வழிநூலுக்கே இத்தகைய யாப்புப்பற்றிச் சிதைவுண்டாதல் கூடும் என்பது பேராசிரியர் கருத்தாகும்.