பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்

  • பழித்தமொழியா ளிைழுக்கங்கூறல்,

விளாமெ னிறுதி பழமொடு புணரிற் றளாவியற் றன்றி யியற்கை யாகும்' என்றாற்போல விளாமென்பதோர் வழுச்சொல்லாற் சூத்திரஞ் செய்தல், ஒன்றற்கொன்றென்பதனை, ஒன்றினுக் கொன்று' எனச் சூத்திரஞ் செய்தலும் அது. 9தன்னானொரு பொருள் கருதிக் கூறலென்பது, மலையடுகடாத்தினை ஆனந்தக் குற்றமெனப் பிற் காலத்தானொருவன் ஒரு சூத்திரங் காட்டுதலும், பதமுடிப் பென்பதோர் இலக்கணம் படை த்துக் கோடலும் (நன் னுால்) போல்வன. 10 என்ன வகையினு மனங்கோளின்மை வருமாறு : 'இருதினைப் பிறந்த வைம்பாற் கிளவிக்கும்’ (தொல் சொல்-பெயர் :7) என்னுஞ் சூத்திரத்திற்கும், "எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி’ (தொல்-எழுத்-புணர் : 26) என்பதற்கும் வேறுபொருள் உரைப்பாருரைக்குமாற்றான் அறியப் படும். 11 இனி மற்றொன்று விரித்தலென்பது. ஆறுறுப்பும் பாவினமுங் கூறுவலென்று புகுந்து பொருளா ராய்ச்சி பலவுங் கூறுதல். இதுவும் இன்னோரன்னவும் மிகை படக் கூறலாய் அடங்குமெனினும் அமையும். 12 நின்றுபயனின்மை யென்பது. பிற்காலத்துத் தோன்றிய வழக்கேபற்றி அவற்றிற்குங் குற்றந் தீர இலக்கணங் காட்டியவழி, அது சான்றோர் செய் யுட்குப் பயன்படாது தம்மோரன்ன செய்யுட்குப் பயன்பட் டொழியச் செய்தல். அவை வந்தவழிக் கண்டுகொள்க. பாட்டி யன் மரபெனக் காட்டுவனவும் அவை. 13 இனி வெற்றெனத் தொடுத்த லென்பது. கேட்போர்க் கின்னா யாப்பின்பாற் பட்டு அடங்கும்.