பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹8 தொல் காப்பியம் 'சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு மியற்பெயர்க் கிளவி முற்படக் கிள வார் ’ (தொல்-சொல்-கிளவி : 41) எனவும் இவை வழுவற்க வழுவமைக்க என்னும் இருபகுதியுள் வழுவமைத்தற்கெழுந்தனவென்பது கருதினான் ஆசிரியனென் பது அறியவந்தன. இதனை முதற்கண் வைத்துப்போய் இறுதிக் கண்ணே உய்த்துக்கொண்டுணர்தலை வைத்தான் இதுவும் அதுபோல் உய்த்துக்கொண்டுணர்தல் ஒருவகையானுடைத்தா யினும் அதனாற் பெற்ற பயன் பிறிதுமொன்று உளதாதல் வேற்றுமை யுடைமையினென்பது; அது முன்னர்ச்சொல்லுதும். இனி, மூவகைத் தமிழ்வழக்கமும் துதலியதும் அவற்றுள் இயற்றமிழே துதலியதும், அதிகாரம் நுதலியதும், அதிகாரத் துள் ஒத்து துகலியதும். ஒத்தினுட் சூத்திரம் துதவியதுமென வும் இவை துதலியதறிதற் பகுதியாய் அடங்குமென்பான் ' மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும்' என்கின்றானென்பது. மேல்வருகின்றவற்றுக்குமொக்கும். அஃதேல் இதனை ஆண்டுவைத்து மற்றதனை ஈண்டு வைப்பினும் இஃதொக்கும் பிறவெனின், அற்றன்று; நூலின்வேறாகிய பாயி ரத்துள்ளாயினும் இந்துதலியதறிதல் வருதலும் உத்தியென்றற்கு இதனை முன்வைத்தானென்பது. 2) அதிக ரமுறைமை - என்பது முன்னின்ற சூத்திரப் பொருண்மை பின்வருஞ் சூத்திரத்திற்கும் பெறற்பாலன பெற வைத்தல்; அவை, இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்” (தொல்-சொல்-கிள - 19) என்றவழி இற்றெனக் கிளத்த லுரிமைபூண்ட தன்றே, அதனைச் 'செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல்” : (தொல்-சொல்-கிளி : 20) என்புழியுங் கொள்ள வைத்தலும், 'குற்றிய லிகர நிற்றல்வேண்டும்’ (தொல்-எழுத்-மொழி 1) என்பதனைக்,