பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔篮憩 தொல்காப்பிய : மென்பது நோக்கி அரிமா நோக்குந், தேரைப் பாய்த்துளும், பருந்து விழுக்காடும் ஆகி வருமெனவுஞ் சொல்லுப; அவையும் இனத்திற் சேர்த்தி யுணர்த்தவேபடுவமென்பது. (3) தொகுத்துக் கூறல் - தொகுத்தியாத்த நூலுள்ளுந் தொகுத்துக்கூறுதல் அவையாவன : எழுத்து முப்பத்துமூன்று, சொல்லிரண்டு. பொருளிரண்டு என ஆசிரியன்றானே தொகை கூறுதல் போல்வன 'இருதிணை மருங்கி னைம்பா லறிய வீற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்' (தொல்-சொல்-கிளவி : 1.0) எனப் பல சூத்திரத்து விரிந்தன தொகுத்தலும், 'ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர் திணைப் பெயர்’ (தொல்-சொல்-பெய 8) என ஒரு சூத்திரத்து விரித்துத் தொகுத்தலும் போல்வனவும் அதன் பகுதியாய் அடங்கும். (4) வகுத்து மெய்ந்நிறுத்தல் அங்கனந் தொகுத்துக்கூறிய வழி எழுத்து முப்பத்துமூன்றென்ற தொகையினைக் குற்றெழுத் தும் நெட்டெழுத்தும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல்வினமும் இடையினமு மென்றாற் போலவும் உயர்திணை அஃறிணை யென்ற தொகையினை ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென்றாற் போலவும் வகுத்தல்: - ' உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும்’ (தொல்-சொல்-பெய 6) எனவும், ' இயற்சொ றிரிசொ றிசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளிட்டச் சொல்லே' (தொல்-சொல்-எச் : 1) எனவும் வருவனவும் அவை இவற்றுள் இருதினையெனக் கூறிப் பெயர் மூன்று, வினை மூன்றென்றலும்; இனி அகத்தினை புறத்தினையெனக்கூறி, அகம்புறமெனக் கோடலும் இனமென்