பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பிய ம் என்றவழி, ஆசிரியவுரிச்சீர் ஆறனுள் இரண்டனை ஒழித்து உரியசை மயக்கமாகிய நான்கனையே ஆசிரியவுரிச்சீரெனவும் வகுத்து நின்றமையினென்பது. மெய் யென்றதனான் வகுத்தவற்றைப் பின்னும் வகுத்து நிறுத்தல் கொள்ளப்படும்; என்னை? இயலசை மயக்க மியற்சீ ரேனை புரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர்’ (தொல்-செய் ! 13) என்று பகுத்தோதியவாற்றானென்பது; அக்கருத்தினானன்றே ஒழிந்த இரண்டனையுங்,

  • கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ'

(தொல்-செய் : 24) என இறந்ததுதழிஇ உரைப்பானாயிற்றென்பது. (5) மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல் - எடுத்தோதிய பொருண்மைக்கு ஏற்ற வகையான் அப்பொருண்மைக்கட் சொல் லாததொன்று கொள்ளவைத்தல், 'முட்டின்றி முடித்த"லென்றதனான் எடுத்தோதாதும் எடுத் தோதியதனோடு ஒக்குஞ் சிறப்பிற்றென்றவாறாம். அதுபோல்வன அதற்கு இனமெனப்படும். மற்று இதனை அருத்தாபத்தி யென்னாமோவெனின், என்னாமன்றே : ' பிறசீ ருள்வழித் தன்றளை வேண்டுப' என்னும் பொருட்டன்றித் தன் சீரொடு இயற்சீர் வந்து தளை கொள்ளுமென மொழியாதோர் பொருள்கோடலினென்க, இனி, ரஃகா னொற்றும் பகர விறுதியும்’ (தொல்-சொல் : 7) என்றவழி ஒழிந்த நான்கெழுத்தும் ஈற்றினிற்குமென்று கோடல் போல்வனவும் அதன் இனமெனப்படும். என்னை? ஒன்றென முடித்த ஹன்னின முடித்த லெனினும் இழுக்காது. இனிச், 'சிரியை மருங்கி னோரசை யொப்பின்’ (தொல்-சொல் : 56)