பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 தொல்காப்பிய ம் ' குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்’ (தொல்-எழுத்-மொழி : 8) எனவும், மூன்று மாத்திரையான் ஒரெழுத்து உண்டென்பாரை விலக்கி வழக்கியலான் இல்லையென்று தன்றுணிபு உரைத்த வாறு. உயிர்மெய் வேறெழுத்தன்றென்பான், " புள்ளி யில்லா வெல்லா மெய்யு முருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலும்’ (தொல்-எழுத்-நூன் : 17) எனவும், ' மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே' (தொல்-எழுத்-நூன் : 18) எனவும், வேறுபடாது கூறுதலும் அது. வழக்கினுள் அறியாதார்மாட்டு ஒன்றுபோல் இசைப்பன வாயினும் அன்றென்று கூட்டமுணர்த்தினமையின், “மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினு மெழுத்திய றிரியா' தொல்-எழுத்-மொழி : 20) என்றலும் அதன்பாற் சார்த்தியுணரப்படும்; பிறவும் அன்ன. (25) பிறன்கோட்கூறல் - தன்னுாலே பற்றாகப் பிற நாற்கு வருவதோர் இலக்கணங் கொள்ளுமாறு கூறுதல் அது,

  • அரையளபு குறுகன் மகர முடைத்தே யிசையிட னருகுந் தெரியுங் காலை'

தொல்-எழுத்-நூன் 13) எனவும்,

  • அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும்

நரம்பின் மறைய வென்மனார் புலவர்” (தொல்-எழுத்-நூன் : 33) எனவும், ' பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப' (தொல்-மெய்ப் : 1 எனவும் இவை அவ்வந்து லுட் கொள்ளுமாற்றான் அமையு மென்றவாறாயின.