பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரவியல் 器继鲨 பிறனுடம்பட்டது தானுடம்படுதல் என்பதற்குப் பிற னுான் முடிந்தது தானுடம்படுதல் எனவும் மூல பாடம் காணப் படுதலால், பிறநூன் முடிந்தது தானுடம்படுதல் என யாப் பருங்கல விருத்தியினும் நன்னூல் மயிலை நாதருரையிலும் காணப்படும் உத்தியும் இதுவும் ஒன்றேயென்பது நன்கு தெளி யப்படும். x - "மொழியாததனை முட்டின்றி முடித்தலாவது, எடுத்தோ தாத பொருளை முட்டுப்படாமல் உரையினான் முடித்தல். இதனை உரையிற்கோடல் என்ப' என்பர் இளம்பூரணர். 'வாராததனான் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராதது முடித்தல்' என்னும் உத்திகள் சொல்லமைப்பில் நன்னூலில் இடம் பெறவில்லை. நன்னூலில் வரும் ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்' என்பது ஒருத்தி. இதனை இரண் டுத்திகளாகக் கொண்டு உய்த்துணர வைப்பு என்பதனை உத்தி கட்கெல்லாம் அடைமொழியாக்குதலும் உண்டு. வாராதது கொண்டு வந்தது முடித்தலை ஒன்றின முடித்தல் எனவும், வந்தது கொண்டு வாராதது முடித்தலைத் தன்னின முடித்தல் எனவும் கொள்ளுதற்கும் இடமுண்டு. 'முந்துமொழிந்ததன் தலை தடுமாற்றம்’ என்பதனைத் 'தலைதடுமாற்றந் தந்து புணர்ந்துரைத்தல் என்பதோர் உத்தி' என்பர் காரிகை யுரையாசிரியர். 'ஒப்பக்கூறல்” என்பது ஒப்பின் முடித்தல் மாட்டெறிந் தொழுகல் என நன்னூலில் வரும் உத்திகளொடு சொல்லாலும் பொருளாலும் ஒத்துள ஒன்று கூறுங்கால் இது பொருட் குறித்த தென்று இரட்டுறச் செய்தல், எனப் பேராசிரியர் விளக்குதலால் இஃது இரட்டுற மொழிதல் என்னும் உத்தி என்பது அவர் கருத்தெனத் தெரிகிறது. ஒருதலைமொழியாவது ஏகாக்கரமென்னும் வடமொழிப் பொருண்மை. அஃதாவது சூத்திரத்துக்குப் பொருள் கவர்த்துத் தோன்றின் அதனுள் ஒன்றினைத் துணிந்து கூறல் என்பர். இளம் பூரணர். ஒரு தலை மொழிதல்' என்பதனை நன்னூலில் வரும் ஒருதலை துணிதல்' என்னும் உத்தியாகக் கொள்ளலாம். 'தன் கோட் கூறல் உடம்பொடுபுணர்த்தல் என்பது இளம்பூர்ணர் கொண்ட பாடம். நன்னூலிலும் இவ்வாறே காணப்படுகிறது .