பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. தொல்காப்பியம் குஞ்சரம் - யானை, குஞ்சரம் குழவிப் பெயர்க்கொடை பெறும் என இயையும். கொடை கொடுக்கப்படுதல், படு சொல் தொக்குநின்றது. (க.க) உc, ஆவும் எருமையும் அதுசொலப் படுமே.1 இனங்ஆரணம் : (இ-ன்ர் என்றது, ஆவும் எருமையும் குழவிப்பெயர் பெறும் என்றவாறு. பேராசிரியம் : (இ~ள்) ஆவும் எருமையும் அவைபோலக் குழவிப் பெயர் கொடைபெறும் (எ - று). குஞ்சரம், ஆணும் பெண்ணுமென இருகூற்றனவாகலான் 'அவை'யென்றான். மக்கண்மேல் வருங்காலும் இஃதொக்கும். ' மடக்கட் குழவி2 யணவந் தன்ன நோயே மாகுத லறிந்துஞ் சேயர் தோழி சேய்நாட் டோரே' (குறுந்: 64) என்பது ஆன்குழவி. "மோட்டெருமை முழக்குழவி - கூட்டுநிழற் றுயில்வதியும்’ (பத்துப்-பட்டி) என்பது எருமைக்குழவி. 1. அவை சொலப்படுமே என்பது பேராசிரியர் கொண்ட பாடம். அது சொலப்படுமே என்பது இளம்பூரணருரையிற் கண்ட பாடம் 'அது' என்றது குழவி' என்னும் இளமைப் பெயரினை. அவை சொலப்படுமே எனப்பாடங் கொண்டார் பேராசிரியர், அவையென்றது, ஆணும்பெண்ணும் ஆகிய யானைகளை. குஞ்சரம் - யானை, குஞ்சரம், ஆs எருமை என்பன ஆணும் பெண்ணும் என இருகூற்றனவாதலால் அவையெனப் பன்மையாற் சுட்டினார் ஆசிரியர். 2 'குழவி' என்னும் இவ்விளமைப்பெயர் மக்களுக்கு வழங்குங் காலத்தும் ஆணும் பெண்ணும் ஆகிய இரு கூற்றினையும் குறிக்கும். -