பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 奥勤 புற்றும், நறிதாயின் மான்மதத்தினை மூக்குணர்வுணர்ந்தவழி இன்புற்றுங் கண்ணுணர்வுணர்ந்தவழி இன்பங்கொள்ளாமையும் வருதலின் அவை பொறியுணர்வெனப்படும். மனவுணர்வும் ஒரு தன்மைத்தாதல் வேண்டுமாலெனின், -ஐயுணர்வின்றிக் கனாப் போலத்தானே யுணர்வது மனவுணர்வெணப்படும். பொறி யுணர்வு மனமின்றிப் பிறவாதெனின், - முற்பிறந்தது மனவுணர் வாமாகவே பொறியுணர்வென்பது ஒரறிவின்றாகியே சொல்லு மென்பது. அற்றன்றியும் ஒருவனுறுப்பிரண்டு தீண்டியவழி அவ்விரண் டும் படினும் ஒருகணத்துள் ஒருமனமே இருமனப்பட்டு அவ்வுறுப் பிரண்டற்கும் ஊற்றுணர்வு கெடாது கவர்ப்ப வாங்கிக் கைக் கொண்டு மீளுமென்பது காட்டலாகாமையானும் அஃதமையா தென்பது? . ஆய்வுரை : மேல் இளமைப்பெயர் பற்றிய மரபு கூறும் வழி, ஒரறிவு உயிர் என்னும் உயிர்ப்பாகுபாடு அதிகாரப்பட்டமையால், அதனொடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறுவகைப்படுத்தி இவ்வியல் உள முதல் நச வரையுள்ள சூத்திரங்களால் விரித்துக் கூறுகின்றார் ஆசிரியர். அவற்றுள் இச்சூத்திரம் அறுவகையுயிர்ப்பாகுபாடு பற்றித் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ஸ்) : ஒரறிவுயிராவது, உடம்பினால் உற்றுணரும் ஓரறிவினையுடையது;ஈரறிவுயிராவது, உற்றறியும் அவ்வறிவுடன் நாவினாற் சுவைத்தறியும் அறிவினையுடையது. மூவறிவுயிராவது உடம்பினால் உற்றறிதலும் நாவினாற் சுவைத்தறிதலும் அவ் விரண்டுடன் மூக்கினால் முகர்ந்தறிதலும் ஆகிய மூன்றறிவினை யுடையது; நாலறிவுயிராவது, உடம்பினாலும் நாவினாலும் 1. ஐம்பொறிகளின் துணை வேண்டாது கனாப்போலத் தானே iணர்வது மனவுணர்வூ, பொறியுண்ர்வுக்கு முன் பிறந்தது ம்னவுணர்வு. அதன்வழித்தாகிய பொறியுணர்வென்பது தனிக் கென அறிவின்றிப் பயிற்சி வயத்தால் நிகழ்வதாதலின் மனத் தின் வழியே செயற்படுவதாகும். 2. மனம் ஒருகணத்துள் ஒருபொருளையே யுணர்வதாகலின் & ஒவகையிர்கப்பிரிந்துசெல்லும்இபாறியுணர்வும் அவையெல்லா iற்றிற்கும் ஒன்றாய் நின்று செயற்படும் ஜனவுணர்வும் தம் முள் வேற்றுமையுடையன என்பது நன்கு தெளியப்படும்.