பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 43 லாகக் கொண்டே நன்றிது தீதிதுவெனப் பகுத்துணரும் அறி வாற்றல் மக்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படும் ஒரு சார் உயிர்த் தொகுதிக்கே வெளிப்பட்டு விளங்குதலால். 'மக்கள் தாமே ஆறறிவுயிரே" என்றார் தொல்காப்பியனார். மனம் ஒரு பொருளைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பொருள் கண் னெதிர்ப்பட்டால் அதனைக் கண்ணென்னும் பொறியுணர்வு கொள்ள அவ்வுணர்வின் வழியே மனந்திரிந்து அக்காட்சியில் ஈடு படுதல் இயல்பு. புறத்தே தோன்றும் பொருள்களின் தோற்றத்தை மனத்திற்கு அறிவித்தது பொறியுணர்வாதலின், உடம்பின் புறத்தே செயற்படும் பொறியுணர்வும் அவற்றுக்குச் சார்பாக நின்று அகத்தே செயற்படும் மனவுணர்வும் தம்முள்வேற்றுமை யுடையன என்பது புலனாகும். தேனாகிய சுவைப் பொருளை நாவென்னும் பொறிவழியாக உணர்ந்த நிலையில் மனம் இன் புறுதலும், அத்தேனையே கண்ணுள் வார்த்து மெய்யுணர்ந்த நிலையில் மனம் துன்புறுதலும்; கத்துாரியாகிய நறுமணப் பொரு ளை மூக்கென்னும் பொறியால் உணர்ந்த வழி இன்புறுதலும் அதனையே கண்ணுணர்ந்த வழி இன்பங் கொள்ளாமையும் உடைமையால் அவை அவ்வப் பொறியுணர்வெணப்படும். மனமானது கனவு நிலையிற் போன்று நனவு நிலையிலும் ஐம் பொறிகளின் உணர்வு வேண்டாது உலகப்பொருள்களின் நலந்தீங் குகளைப்பகுத்துணரும் ஆற்றலுடைய தென்பர் அறிஞர்.அங்ங்ணம் ஐம்பொறிகளின் உதவியின்றி மனம் தானே உய்த்துணரும் உணர்வு மனவுணர்வெனப்படும். இவற்றுள் ஐம்பொறியுணர்வுகட்கும் அடிப் படையாய் அமைந்ததுமனவுணர்வாகும்.ஆகவேபொறியுணர்வென் பது இப்பொழுது இன்ன பொருளை நுகர்கின்றோம் என எண்ணும் தன்னுணர்வுக்கு இடமின்றியே அவ்வப் பொறிகட்குஅமைந்துள்ள பழக்கவுணர்வு எனக்கருதும்படி தன்னியல்பில் நிகழ்வதாகும் எனப் பேராசிரியர் தரும் விளக்கம் இங்கு நினைவுகூர்தற்குரியதாகும். (உ.எ) உவு. புல்லும் மரனும் ஒரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே இளம்பூரணம் : (இ - ள்) : ஒரறிவுயிராமாறு புல்லும் மரனும் என்று சொல்லப்பட்ட இருவகை உடம்பினாலறியும்; அக்கிளைப் பிறப்பு பிறவும் உள என்றவாறு.