பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபி: ல் கண்டு கொள்க. இவற்றுக்குக் கண்ணுஞ் செவியுமின்மை எற்றால் அறிதுமெனின் ஒன்று தாக்கியவழியன்றி அறியாமையிற் கண் னில வென்பதறிதும், உரப்பியவழி ஒடாமையிற் செவியில வென்பதறிதும் இவற்றின் கிளையென்பன ஈயன்மூதாய்.(அகம் :14) போல்வன. பிறப்பென்பன, முற்கூறியவாறே மக்கட் குழவி யும் விலங்கின் குழவியும் இம்மூன்றுணர்வாகிய பருவத்தனவும் அட்டை முதலாகியவுமெல்லாங் கொள்க. ஆய்வுரை : மூவறிவுயிராவன இவையென்கின்றது. (இ-ள்) கறையானும் எறும்பும் ஊற்றுணர்வும் நாவுனர் வும் மூக்குணர்வும் ஆகிய மூவறிவினையுடைய உயிர்களாகும். அவற்றுக் கிளையும்பிறப்பும் அவ்வாறே மூவறிவுடைய பிறவும். உள எறு. சிதல் - செல்; கறையான் இவை ஒன்றையொன்று தாக்கிய வழி அறியாமையினால் இவற்றுக்குக் கண்ணுணர்வு இல்லை என்பதும் இவற்றை அதட்டிய வழி ஓடாமையால் இவற் றுக்குச் செவியுணர்வு இல்லை என்பதும் புலனாம் என்பர் பேராசிரியர். 'சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர்' (நன்னுரல்-447) என்றார் பவணந்தியார். (Бо) க.க. நண்டுந் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். நாலறிவுயிரமாறு உணர்த்து தல் துதலிற்று. (இ-ள்) நண்டும், தும்பியும்? நாலறிவையுடைய; அக் கிளைப்பிறப்பு பிறவு முள என்றவாறு. பிறவுமென்றதானன் Dமிறு, சுரும்பென்பன கொள்க. 1. Ful மூதாய் - தம்பலப் பூச்சி 2. நண்டு என்பது நீரில் வாழும் உயிர், தும்பி என்பது மலர் களில் நுகரும் சிறு பறவை.