பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் あ鍵 பேராசிரியம் : இஃது, ஐயறிவுடையன கூறுகின்றது. (இ-கள்) ஐயறிவுடையன விலங்கும் அவை போல்வன ஒருசார் மானிடங்களுமாம். அக்கிளைப்பிறப்புப் பிறவும் உள (எாறு). மாவென்பன - நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார் - மனவுணர்ச்சியில்லாதாா.கிளையென்பன-எண்கால் வருடையுங் குரங்கும் போல்வன. எண்காலவாயினும் மாவெனப்படுதலின் வருடை கிளையாயிற்று. குரங்கு நாற்காலவாகலிற் கிளையா யிற்று. பிறப்பென்பன கிளியும் பாம்பும் முதலாயின. மற்றுப் பாம்பிற்குச் செவியுங் கண்ணும் ஒன்றேயாகிக் கட்செவியெனப்படுமாதலின் ஐயறிவில்லை பிறவெனின் - பொறி யென்பன வடிவுநோக்கின அல்லவாகலின் ஒன்றே இரண்டுனர் விற்கும் பொறியாமென்பது. கிளியென்பது பறவையாகலின் அதனை வேறோதுகவெனின், முன்னையவற்றிற்கும் பறவையென் றோதிய திலனாகலான் அவ்வச் சூத்திரங்களானே எல்லாம் அடங்குமென்பது. மற்றுப் புல்லும் மரனும் முதலாக இவ்விரண்டு பிறப்பெடுத் தோதி ஒழிந்தனவற்றையெல்லாம் பிறவுமுள வெனப் புறனடுத்த தென்னையெனின், அவை வரையறையிலவாகலின் அங்ங்ணங் கூறினான்; அல்லது உம், மக்களும் புள்ளும் விலங்கும் முதலாயின ஓரறிவினவென்றும் ஈரறிவினவென்றும் எண்ணி வரையறுக்கப் படாமையாலும் அவ்வாறு கூறினானென்பது. ஆய்வுரை : இஃது ஐயறிவுயிராமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) நாற்கால் விலங்கும் அவைபோன்று உய்த்துணர் வில்லாத சில மக்களும் ஐம்பொறிகளின் அறிவுடையன. அக் கிளைப் பிறப்புப் பிறவும் உள எ-று. 'மாவும் புள்ளும் ஐயறிவினவே” என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்பது 1. அறுவகையுயிர்களுள் புல்லும் மரனும் முதலாக இவ்விரண்டு பிறப்பினை எடுத்தோதிய ஆசிரியர், அவற்றுள் சேர்க்கத் தக்கனவற்றைப் பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' எனப் புறனடையாக எடுத்துக் கூறியதன் கருத்து அவற்றுக்கு வரையறையில்லை என்பதனைப் புலப்படுத்தலேயாகும்.