பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 6? அப்பரென்பது இக்காலத்து வீழ்ந்ததுபோலும்.' யாத்தவென்றதனாற் கடாவென்பதும் யாட்டிற்குப் பெயராகக் கொள்க.2 அது, ... : : 'நிலைக்கோட்டுவெள்ளை நரல்செவிக்கடாஅய்'(அசம் :155) எனவரும். இனிக் குரங்கினை அப்பரென்றலுங் கொள்க.3 ஆய்வுரை : (இ-ள்) மோத்தை, தகர், உதள், அப்பர் என்னும் ஆண்மை பற்றிய மரபுப் பெயர்கள் நான்கும் ஆட்டினத்தின் கண்ணே மிகவும் இயைபுடையனவாய் வழங்குவன என்பர் ஆசிரியர். எ-று. யாத்தல்-மிகவும் பொருட்பிணிப்புடையதாதல், இதனால் கிடாய் என்னும் ஆண்மை பற்றிய மரபுப்பெயரும் ஆட்டினத்திற் குரியதாய் வழங்கும் வழக்கு எனக்கொண்டார் பேராசிரியர். அப்பர் என்னும் பெயர் யாட்டினத்துள் ஆணுக்குரியதாய் வழங்கும் வழக்கு பிற்காலத்தில் வீழ்ந்தது என்றார் பேராசிரியர். (5'-off) சக. சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவனும் மாயிருந் தூவி மயிலலங் கடையே இளம்பூரணம் : (இ-ள். மயிலல்லாத புள்ளின்கண் ஆண்பெயர் சேவ லென்று கூறப்படு மென்றவாறு. 1 யாட்டுக்கு வழங்கும் ஆண்பாற் பெயர்களுள் அப்பர் என்பது பேராசிரியர் காலத்திலேயே வழக்கு வீழ்ந்தது. 2. யாத்த' என்றதனாற் கடா என்பதனை யாட்டிற்குரிய ஆண் பாற் பெயராகக்கொண்டு, 'நிலைக்கோட்டுவெள்ளை நால்செவிக்கடா”(அகநாநூறு-155) என்பதனை உதாரணமாகக் காட்டுவர் பேராசிரியர்.கடா என் னும் ஆண்பாற் பெயர் சங்கச் செய்யுட்களில் கிட்ாய் எனத் திரிந்து வழங்குகின்றது. 3. குரங்கினுள் ஆணினை அப்பர் எனவழங்கும் வழக்கு பேரா சிரியர்காலத்து நிலைபெற்றிருந்தமை இவ்வுரைத் தொடராற் புலனாம், .”