பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 8 தொல்காப்பியம் கலித்தொகை 114-ஆம் பாடலில் வரும் ‘எருமைப்பெடை யோடு எனவரும் தொடருரையில் எருமைப் பெடையென்றது, பேடையும் பெடையும் (தொல்-மரபு-ருடு) என்னுஞ் சூத்தி ரத்து நாடின் என்பதனால் அமைத்தாம் என்பர் நச்சினார்க் கினியர். எனவே அவர் தொல்காப்பிய மரபியலுக்கு உரையெழுதி யுள்ளமை நன்கு தெளியப்படும். (டுடு) டுசு, கோழி கூகை ஆயிரண் டல்லவை. சூழுங் காலை அளகெனல் அமையா. இளம்பூரணம் : (இ-ள்) கோழியுங் கூகையும் அளகெனப்படும். டுன. பெண்பா லான அப்பெயர்க் கிழமை மயிற்கு முரித்தே. இளம்பூரணம் : - (இ-ள்) அளகென்னும் பெண்பாற் பெயர் மயிலுக்குப் பெண்பாற்கும் உரித்து என்றவாறு. பேராசிரியம்: (இ~ள்) கோழியுங் கூகையும் மயிலுமென்பனவற்றுக்கு அள கென்னும் பெயர் உரியது? (எ-று). 'மனைவாழ் அளகின் வாட்டோடு பெறுகுவிர்' (பெரும்பாண். 256) என்பது, கோழி, பிறவும் அன்ன. ஆய்வுரை : இ-ன்) கோழி, கூகை ஆகிய அவ்விரண்டுமல்லாத பறவை கள் ஆராயுங்கால் அளகு' என்னும் பெண்மைப் பெயரால் வழங்கப்பெறா; எனவே கோழி கூகை என்பனவே அளகு' என்ற பெண்மைப் பெயரால் வழங்கப்பெறும் எ-று. 1. அப்பெயரென்றது அளகு என்னும் பெயரை. 2. இவ்விரு சூத்திரங்கட்கும் பொருளியைபு நோக்கி ஒன்றாக உரை வரைந்தார் பேராசிரியர்,