பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி ரபியல் 3 i. வெவ்வாய் வெரு கென்றதனாற் படப்பை வே லியும் புதலும் பற்றி விடக்கிற்கு வேற்றுயிர்கொள்ளும் வெருகினை, இல்லுறை பூசையின் பெயர்கொடுத்துச் சொல்லலும் (புறம் : 117, 326) அமையுமென்றவாறு. குதிரையைச் சேவலென்றல் இக்காலத் தரிதாயிற்று.அதுவுஞ் சிறகொடு சிவனாதாயினும் அதனைக் கடுவிசைபற்றிப் பறப்பது போலச் சொல்லுதல் அமையுமென்பது கருத்து. எருமை யேற்றினையுங் கண்டி யென்பபோலும்; அது காண லாயிற்றில்லை; அதனை, இலக்கணை வகையா னுடைய பெய ரென்றலுமாம்; இதுபொழு தின்றென்பது. கடறிைந்தோ, ரென்றதனான், வழக்கினுஞ் செய்யுளினும் அவை வந்தமையிற் கடப்பாடறிவோர்க்குக் கடியலாகாதென்ற வாறு இன்னும் இப்பரிகாரத்தாலே கோழியை வாரணமென் றலும் வெருகினை விடையென்றலும் போல்வன பலவும் கொள்க. அவை, கான வாரண மீனுங் காடாகி விளியு நாடுடை யோரே ’’ (புறம் : 52) எனவும், வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ' (திருமுரு : 21.9) எனவும், ' வெருக்கு விடையன்ன வெருகணோக்குக் கயந்தலை - - (புறம் : 324) எனவும் வரும். ஆய்வுரை : இஃது, உலக வழக்கினுள் மருவி யிடம்பெற்றுள்ள மரபுப் பெயர்களைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) ஆண்குரங்கினைக் கடுவன் என்றுகூறுதலும், மரப்பொந்தினுள் வாழும் கூகையைக் கோட்டான் என்று கூறு தலும், சிவந்த வாயினையுடைய கிளியைத் தத்தையென்று கூறு தலும், வெவ்விய வாயினையுடைய வெருகினை (காட்டுப் பூனை யினை)ப் பூசையென்று கூறுதலும், ஆண் குதிரையைச் சேவல்