பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் § 3 எனவரும் சிலப்பதிகாரத் தொடரும் இக்கருத்துக்கு அரண் செய் தல் காணலாம். (சுக) எ0. பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. இளம்பூரணம் : ((இ-ன்) பெண்ணும், ஆணும், பிள்ளையும் பற்றிவருஞ் சொல் மேலெடுத்தோதினவை என்றவாறு. இனிச் சிறப்புவிதியுடைய அந்தணர்க் குரியன கூறப்படு கின்றது. பேராசிரியம் : இது மது, பெண் ஆணென்பன இருதினைப்பெண்மைக் கும் ஆண்மைக்கும் பொதுவென்பன முற்கூறினான் மேல் ஒன் றற்குரிய பெயர் மரீஇ வந்து பிறிதொன்றற்காயவழியுங் கடிய லாகாதென நின்ற அதிகாரத்தான் இவையும் அவ்வாறே திரியி னுங் கடியலாகாதென்றவாறு. (இ-ள்) பெண்ணும் ஆணும் பிள்ளையுமென வாளாது சொல்லியவழி உயர்திணைக்கேற்றன மரீஇ வந்த மரபு (எ-று). 1. ஆண், பெண் என்பன இருதிணைக்குமுரிய விரவுப்பெயர் கள் ஆகும். ஆண் பாலெல்லாம் ஆனெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்பவை யவையவை யப்பாலான(தொல்-மரபியல்-ருo) என்ற சூத்திரம் அஃறிணைக்குரிய ஆண், பெண் என்பவற் றை உணர்த்தியது. பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவை யே (எல்) எனவரும் இச்சூத்திரம் உயர்திணைக்குரிய ஆண், பெண், பிள்ளையென்னும் இப்பெயர்கள் போன்று மக், குழவி என்னும் பெயர்கள் உயர்திணைக்கேயுரியவாய்ப் பயின்று வழங்கவில்லை. ஆண்பிறந்தது, பெண்பிறந்தது என அடைமொழி சேர்க்காது கூறிய நிலையில் ஆண், பெண், பிள்ளை என்பன உயர்திணைக்கே யுரியவாயின. இவை அஃறிணையைக் குறிக்கும் நிலையில் ஆண் குரங்கு பிறந்தது. பெண்குரங்கு பிறந்தது என அடைமொழிபுணர்த்தே வழங்கப் பெறும் என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும்.