பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

છેઃ છો? தொல்காப்பியம்- பொருளதிகாரம்

(இ - ள்) மேற் கூறப்பட்ட உள்ளுறையுவமம் இன்ப துன்பங்கள் தோன்றச் சொல்லவும்படும் (எ - று).

'கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கது.உம் ஊரன்' (குறுந் 8)

என்பது, பலவகை யின்பமும் வருந்தாது பெறுவரென்பதற்கு உவமையாகி வருதலின் இனிதுறு கிளவி யெனப்பட்டது.

"தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு

பிள்ளை தின்னு முதலைத்து’’ (ஐங்குறு.24)

என்பது, தலைமகன் கொடுமை கூறினமையின் துனியுறுகிளவி யாயிற்று.

இவ்விரு பகுதியும் படச் செய்யப்படும் மேற்கூறிய உள் ளுறையுவமமென்பது இதன் கருத்து .

"மருங்கு' என்னும் மிகையானே ஏனையுவமத்தின் கண்ணும் இப்பகுதி கொள்ளப்படும் ; அவை,

“மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே (குறுந் 71) என்பது, இனிதுறு கிளவி.

'கராத்தின் வெய்யவெந்தோள்'

என்பது, துனியுறுகிளவி.

ஆய்வுரை

இது மேற்குறித்த உள்ளுறையுவமையில் இடம்பெறும் பொருள் வேறுபாடு பற்றிய சொல்வகை உணர்த்துகின்றது.

(இ, ள்) இன்பத்தினை விளைக்குஞ்சொல்லும் துன்பத்தினைப் புலப் படுத்துஞ் சொல்லும் இவ்வுள்ளுறையுவமையிடத்தே தோன்றும் எ- று.

1. மேற்கூறிய உள்ளுறையுவமம் இவ்விரு பகுதியும் படிச் செய்யப்படும் என்பது

இதன் கருத்து என இயையும், இவ்விரு பகுதியாவன இனி துறு கிளவியும் துனியுறு

ટ ઠ ડ ડ્રાi,