பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ಿ

உவமையியல் - நூற்பா க

  • குயில்போன்ற மொழி' செவியாலறியப்பட்டது. ‘'வேம்புபோலக் கைக்கும்’ நாவினாலறியப்பட்டது.

தீப்போலச் சுடும்’ மெய்யினாலறியப்பட்டது. * ஆம்பல் நாறுந் துவர்வாய்” (குறுந், கல்ம்)

மூக்காலறியப்பட்டது.

'தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு’’ (குறள், ககம்.எ)

மனத்தானறியப்பட்டது.

பிறவு மன்ன. (க)

பேராசிரியம்

இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், உவமவியல் என் னும் பெயர்த்து. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொரு ளினை ஒப்புமை கூறுதல். இதனானே இவ்வோத்து நுதலியது உம் உவமப்பொருளே கூறுதலாயிற்று. மற்று அகம்புறம் என்பனவற்றுள், இஃது என்ன பொருள் எனப்படுமோவெனின், அவ்விரண்டுமெனப் படும் : மெய்ப்பாடுபோல என்பது. என்னை?

'உவமப் பொருளி னுற்ற துனருந்

தெளிமருங் குளவே திறத்திய லான (தொல். பொருள். 295)

என மேல்வருகின்றதாகலின்.

மற்றிவ்விருதினைப் பொருளும் உவமம்பற்றி வழக்கினுள் அறியப்படுதலானும், உவமம்பற்றியும் பொருள் கூறுகின்றானென்பது. மேல் அகத்திணையியலுள் (A9) உவ மத்தினை இரண்டாக்கி ஒதினான்; உள்ளுறையுவமம் ஏனையுவமமென. அவ்விரண்டனையும் ஈண்டு விரித்துக் கூறுகின்றவாறு. அவற்றுள், ஈண்டு ஏனையுவமத்தினை முற்கூறினான், அஃது அ. க த் தி ைண க் கே சிறந்ததன்றாயினும்