பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் يع ، يا يَة

பேரூ ரட்டகள்ளிற்கு

ஒரில் கோயிற் றேருமா னின்னே’’ (புறம்.300) என்பது, குற்றமன்றாகலின் அதுவுங் குற்றமன்றெனப்படும். இனிப் பொன்மாலையும் பூமாலையும்போலப் பொலிவு செய்தலின் இதுவுங் குற்றமாகாது மேலதே குற்றமென்பது, அற்றன்று இன்னசொல்லும் இன்ன பொருளுமுடையன பொன்மாலையெனவும் பூமாலையென வும் வரையறுத்துக் கூறலன்மையின் அதனானும் அதனைக் குற்ற மென்று இலக்கணத்தாற்கூறின் நிரம் பாது, அல்லது உ ம் பொருளதி காரத்துட் பொருட்பகுதிகளெல்லாஞ் செய்யுட்கு அணியாகலான் அவை பாடலுட் பயின்றவை யெனப்பட்டன. என்ற தாைன், அவையெல்லாந் தொகுத்து அணியெனக் கூறாது வேறு சிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்றாமென்பது.

இனி,இரண்டு பொருளெண்ணியவற்றை வினைப்படுக்குங்கால் ஒருங்கென்பதொரு சொற்பெய்தல் செய்யுட்கு அணியென்ப. பிறவும் இன்னோரன்ன பலவுஞ், செய்யுட் கணியாமென்பது அவர்கருத்து. ஒருங்கே யென்பதேயன்றி மூன்று தாழிசையுண் மூன்று பொருள் கூறி எனவாங்கு' என்பதொரு சொல்லான் முடிந்தவழியும் எனவாங்கு” என்பதொரு மொழி எனவென்பது ஒரலங்கார மெனல்வேண்டுமாக லான் அவ்வாறு வரையறுத்துக் கூறலமையாதென்பது. பிறவும் அன்ன.

இனி, அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது அணியென்ப வாயிற் சாத்தனையுஞ் சாத்தனாலணியப்பட்ட முடியுந்தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல அவ்வணியுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டுமென்பது.

இனிச், செய்யுட்கணி செய்யும் பொருட்படை எல்லாங்கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக்கூறலா (663) மென்பது. அவை யாவையெனின்.

  • அகனமர் கேள்வ னகற்சி தீர்த்தற்கு

மகனொடு புகுந்த மகவுநிலை யெனாஅ மறுக்குங் காலை மறுத்துரை மொழியாது குறிப்புவேறு கொளிஇய குறிப்புநிலை யெனா அட் புலவிக் கண்ணும் போக்கின் கண்ணு மழுதலு மழாஅதலு முயங்கலு மென்றாங் கிருவகைப் பட்ட மங்கல மெனாஅப் புலம்புறு காலை யறிவொடு படாது புலம்புகொள வந்த செய்வினை யெனாஅ