பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரும் தொல்காப்பியம் -பொருளதிகாரம்

மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்த வோத்தென்பது ஒன்று செய்தாராயின் அகத்தியமுந் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யுங் குற்றம் வேறுபடாவென்பது அஃதேற் செய்யுட்கு இவை யணியென்பது உம் இவை குற்றமென்பது உம் மூன்றதிகாரத்துள்ளும் இவ்வாசிரியர்யாண்டுங் கூறாரோவெனின், செய்யுளியலில் முப்பத்துநான் குறுப்புக் கூறி அவற்றதியைபு நல்லிசைப் புலவர் செய்யுளுறுப் பெனவும் அவை தொடர்ந்த தொடர்நிலை எண்வகையாற்றொடர் நிலைச் செய்யுட்கு வனப்பெனவும் பகுத்தோதிய இலக்கணத்திற்பிறழ்ந்தவை எல்லாங்குற்றமென்பது உம் கொள்ளவைத்தானென்பது.

  • ஒருவரை விலக்க மூவரும் வந்திலர்' என்புழி ஒருவர் என்பவர் அம்மூவருள் அடங்குமாறுபோன்று, ‘சுண்ண்ம்வரை நிலைவைத்தமூன்று என்புழிச் சுண்னம் என்பது, சுண்ணமும் அடிமறியும் மொழி மாற்றும் எனச் சொல்லப்பட்ட அம்மூன்றனுள் ஒன்றாய் அடங்கும் என்பதாம். கண்ணம், அடிமறி, மொழிமாற்று என்பன மூன்றும் சுண்ணம்போன்று சிதர்ந்து கிடப்பனவாதலின், அப்பொருள்கோள் வகையில் உவமமும் பொருளும் வேறுவேறு சிதர்ந்து கிடப்ப உவ. மங்கூறின் அவ்வுவமத்தாற் பொருள்விளங்காது என்பார்,கண்ணம். வரைநிலைவைத்த மூன்றலங்கடையே என்றார்.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் தொல்காப்பிய உவமயியலுட் கூறப்பட்ட உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்திலும் செய்யுளியலிலும் கூறப்படும் சிலபொருள்களையும் எடுத்துக்கொண்டு அவை செய்யுட்கு அணியாம் எனக்கொண்டு தமிழில் அணியிலக்கண நூல்கள் பல தோன்றலாயின. வடமொழியில் உள்ள தண்டியலங்காரத்தின்வழியே தமிழில் தண்டிய லங்காரம் என்றதோர் அணியிலக்கணநூல் தோன்றியது. பிற்கால் அணியிலக்கணநூல்களிற் கூறப்படும் அணியமைதிகள் புலமைத்திறத் தில் வல்லவர்களாற்செய்யப்படும் செய்யுட்களில் அணியென மதிக்கப் பெற்றும் புலமைத்திறத்திற் குறைந்தவர்களாற் செய்ய்ப்படும் செய்யுட்களில் அணியமைவிற் சிதையா நிலையிலும், அணியென மதிக்க்ப்பெறாமலும் வருத்லின் அவ்வணியமைப்புக்கள் யாவும் உறுதியாகச் செய்யுட்கு அணிசெய்வன் எனச்சொல்லுதற்கில்ல்ை. யென்பது பேராசிரியர் கருத்தாகும்.

உவமையென்பது பொருள்புலப்பாட்டிற்குரிய கருவியேயின்றி அஃது அணியெனப்படாது. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற் கூறப்படும் பொருட்பகுதிகள் யாவும் செய்யுட்கு அழகினைத்தரும் உறுப்புக்களாதலின் அவையெல்லாவற்றையுமே தொகுத்து அணி