பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:: பொருளதிகாரம் - தொல்காப்பியம்

நிற்றலும், புலிப்பாய்த்துள்' எனத் தொக்கு வருதலும் உடைத் தென்பது. தொகை நான்கென எண்ணிக் கொடுத்தான்."

வரலாறு: புலியன்ன மறவ னென்பது வினையுவமம் அது பாயுமாறே பாய்வனென்னுந் தொழில்பற்றி ஒப்பித்தமையின்; அற்றன்றித் தோலும் வாலுங் காலும் முதலாகிய வடிவும் ஏனை வ ண் ண மு. ம் பயனும் ஒவ்வாவென்பது; ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும்.

  • மாரி யன்ன வண்கைத்

தேர்வே ளாயைக் காணிய சென்மே” (புறம், 133)

என்பது பயவுவமம்' என்னை? மாரியான் விளைக்கப்படும் பொருளும் வண்கையாற் பெறும் பொருளுட ஒக்குமென்றவாறு.

துடியிடை யென்பது மெய்யுவமம்: அல்குலும் ஆகமும் அகன்றுகாட்ட அஃகித்தோன்றும் மருங்குலால் துடி அதனோடு ஒத்தது’.

"பொன்மேனி யென்பது உருவுவமம்; பொன்னின்கண் னும் மேனியின் கண்ணுங் கிடந்த நிறமே ஒத்தன, பிற ஒத்தில வென்பது. இந்நான்கும் பற்றி உவமந் தோன்றுமென்பது கருத்து. "உவமத்தோற்றம்’ என்பது மூன்றாவதன் தொகை உவமத்தாற் பொருள் தோன்றுந் தோற்றமென்றவாறு."

1, 'வினைபயன் மெய் உரு என்னும் வைப்பு முறைக்குக காரணம் கூறுவதாக அமைந்தது இவ்வுரைப்பகுதியாகும். வினையால் விளைவது பயனாதலின் இது வினையின் பிற்கறப்பட்டத. அதுபோல் வடிவினால் தோன்றுவது கிறமாதலின் மெய்யின் பின் உருவைக்ககப் பெற்றது. மெய்-வடிவு. உரு-கிறம். பயன் என்பதும் பொருளாதலால் மெய்யினையும் (வடிவென்னும் பொருளினையும்) அதனுடன் வைத்தார்.பொருளின் புடைபெயர்ச்சியாகியவினை யுவமம் ய்ெமரபுவமத்தின் பின்னரே கூறத்தக்கதாயினும் வினையுவம் 'புலிமறவன்' என்றாங்கு தன்னுருபு மறைக் து கில்லாது புலியன்ன மறவன் என விரிந்தே கிற்றலும் புலிப்பாய்த்துள்’ என உருபு மறைந்து வருதலும் ஆகிய சிறப்புடைமை கோக்கி முற் கூறப்பட்டது என விளக்கக். தருவர் பேராசிரியர்.

புலயன்ன மறவன் என்பது,

" * * * : : ^ నిషి -- - - - - புலபா புமாறேலாய்வன் என்னுக்தொழில் பற்றி ஒப்பித்தமையின் வினையுவமம் .

2. ஆகம்-மார்பு

அகன்று காட்டுதல். விரிக் து தோன்றுதல் அஃகித்தோன்றுதல்.சுருங்கித் தோன்றுதல்

«Y ... ... to - - - - - - - .ே - வத்தோற்றம்" என்பது, 2. வமத்தாற்பொருள் தோன்றும் தோற்றம் ை ைவிரிதலின், மூன்றாம் வேற்றுமைத் தொகையாகும்,