பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௧௪

தொல்காப்பியம் பொருளதிகாரம்

‘செவ்வான் அன்ன மேனி' என்பது, நிறம் ஒன்றே பற்றி வந்த உவமை. அவ்வான் இலங்குபிறையன்ன விலங்கு வால் வையெயிறு என்பது, வண்ணமும் வடிவும் ஆகிய இரண்டும் விரவி வந்த உவமை. 'காந்தள் அனிமலர் நறுந்தாது ஊதுந்தும்பி, கையாடு வட்டிற்றோன்றும் என்பது, ஆடுதற்றொழில் பற்றியும் வடிவு பற்றியும் வண்ணம் பற்றியும் வண்டினுக்கு வட்டுக்காய் உவமையாயிற்ற.

. உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை

இளம்பூரணம்

என்- எனின் மேலதற்கோர் சிறப்புவிதி யுணர்த்துதல் துதலிற்று.

(இ-ள்.) மேற்சொல்லப்பட்ட உவமை ஆராயுங்காலத்து உயர்ந்ததன் மேலன என்றவாறு.

ஈண்டு உயர்ச்சியாவது-வினைமுதலாகச் சொல்லப்பட்டன உயர்தல்” .

"அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்"(பட்டினப்.உ௬௮)

என்றவழித் துப்புடையன பலவற்றினும் அரிமா உயர்ந்ததாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது.

  "தாமரை புரையுங் காமர் சேவடி" (குறுந்.கடவுள்வாழ்த்து) என்றவழிச் சிவப்புடையன பலவற்றினும் தாமரை யுயர்ந்ததாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது. அஃதேல்,
   "கொங்கியர் ஈன்ற மைந்தரின்
   மைந்துடை உழுவை திரிதருங் காடே’’

என இழிந்ததன்மேல் உவமை வந்ததால் எனின், ஆண்டுக் கொங்கிய ரின்ற மைந்தரின் என விசேடித்த தன்மையான் அவர் பிறநிலத்து மக்களொடு ஒரு நிகரன்மையின் அவரும் உயர்ந்தோராகக் கொள்க.

1. உயர்தல் . வினை பயன் மெய் உரு எனச்சொல்லப்பட்ட ஒப்புமைத் திறத்தால் உயர்தல்,

2. துப்புடையன வலிமையுடையன. அரிமா.சிங்கம், உழுவை-புலி, ஆணி யூசியென்றது போழ் தூண்டுசியினை, .