பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமையியல்-நூற்பா ௩

என்பனவுமெல்லாம்.அவை. இவற்றுள்மலையுஞ்சுனையும் உவமையின்மையின் அவற்றைப் பிறையோடும் மதியோடும் உடன்வைத்து உவமைபோலக் கூறி எதிர்மறுத்தது என்னையெனின், அவையாமாறு "முதலுஞ் சினையும்’ என்புழிச் (தொல். பொருள். 281) சொல்லுதும்.

' "என்ற வியப்ப என்றவை யெனாஅ" (தொல்.பொருள்.286)

என மேல்வருஞ் சூத்திரத்துள் என்றவென்பதோர் உவமவுருபு கூறினமையின், 'வாயென்ற பவளம்’ எனவும் "வாய்பவளமாக’’ எனவும் "வாய்பவளம்’’ எனவும் வருவனவும் அக்குறிப்புவமையின் பகுதியெனவே படும். இவற்றை வேறு வேறு பெயர் கொடுத்து விரித்துக் கூறாது'முன்னத்தினுணர்'வனவே இவையெல்லா டென்னுந் துணையே இலேசினாற் கூறி ஒழிந்ததென்னையெனின், இவற்றாற் செய்யுள் செய்வார் செய்யும் பொருட்படைப்பகுதி எண்ணிறந்தனவாகலின், அப்பகுதியெல்லாங்கூறாது பொதுவகை யான் வரையறைப்படும் இலக்கணமே கூறி யொழிந்தானென்பது. "வாயென்ற பவள மெனவும்” “வாய்பவள மாகவெனவும்” “வாய் பவளமெனவும்’ வந்த பவளக்குறிப்புவமைகளை இக்காலத்தார் உருவக மென்றே வழங்குப."

 இனி, 'வாய்பவளம் (யா. வி. ப. 362)
"கண்ண கருவிளை (யா. வி. ப. 394)

எனவும், .

பெயர்ப்பயனிலை வரின் அவற்றைஒற்றுமைகாட்டி உருவகம் என்றாராகலின் அதுவும் உவமையெனவே படு மென்பது. (௩)

1. அவை-முன்னத்தான் உவமஞ்செய்தன.

2. செய்யுள் செய்வார் உவமத்தாற்செய்யும் பொருட்படைப்பகுதி எண்ணிறந்தனவாகலின், அப்பகுதியெல்லாம் விரித்துக் கூறின் பெருகுமாதலின் அப்பகுதி. யெல்லாங்கூறாது பொதுவகையான் வரையறைப்படும் இலக்கணமே கூறியவாயேண்ற பவளம், வாய்பவளம், வாய்பவளமாக என்றாங்கு வருவனவற்றை முன்னததின் உணருங்கிளவியாகிய குறிப்புவமைப்பகுதியின் கண் அடக்கிக்கறினார் தொல்காப்பியனார். இத்தகைய குறிப்புவமைகளை இக்காலத்தார் உருவகமென்றே வழங்குவர். இங்ஙனம் குறிப்பினால் வரும் உவமைகளுள் தாமரையன்றுமுகமே. எனத் துணிக்ததனை உண்மையுவமையெனவும், 'மழையன்று வண்டிருத்தலிற்குழலே’ எனப் பொருட்குக் காரனங்கொடுத்தலைத் தேற்றவுவமை எனவும் கூறுவர் தண்டியாசிரியர். மதிக்கொல்லோ மறுவில்லையென்று உவமைக்குக் குறைபாடு கூறுதல்

விலக்குவமையின்பாற்படும்.