பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௪ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

(இ-ள்) மேற்சொல்லப்பட்ட சிறப்பு முதலிய நான்கும் ஒழியத் தாழ்ந்த பொருளொடும் உவமை பொருந்துமிடத்து உவமிக்கப்படும் அதனோடுங்கூட ஐந்தாம் என்றவாறு.

என்றது பொருள் உவமமாயும் உவமம் பொருளாயும் நிற்குமிடமும் உள என்றவாறு'

  "ஒண்செங் கழுநீர்க் கண்போ லாயித
   மூசி போகிய சூழ்செய் மாலையன்"     (அகம்.ச.அ)

என்றாற் போல்வன. மேற்சொல்லப்பட்ட நான்கும் உயர்வின் பகுதி யாதலின் இதனொடுங்கூட ஐந்தென்றால்? (௫)

1. உயர்ந்ததன்மேற்றேயுள்ளுங்காலை' என உவமேயமாகிய பொருளிலும் உவமையினை உயர்ந்ததாக வைத்துரைத்தலின், இச்சூத்திரத்திற் கிழக்கிடுபொருள் என்றது, உவமையினுக் தாழ்ந்ததாகிய உவமேயப்பொருளைக்குறித்தது, எனவும்: தாழ்ந்ததாகிய உவமேயமும் உயர்ந்ததாகிய உவமானப்பொருட்டு உவமையாய்வருதற்குரியது எனவும் கொள்ளும்படி

"பொருள் உவமமாயும் உவமம் பொருளாயும் கிற்குமிடமும் உள' என வரும் இத்தொடர் இவ்வுரையிடை பிற் சேர்க்கப்பெற்றுளது. இக்கருத்து

"பொருளே யுவமஞ்செய்தனர் மொழியிலும்

மருளறு சிறப்பின ஃதுவமென்ப'     (உவம . கூ)

எனப்பின்வரும் சூத்திரத்துத் தெளிவாகக் கூறப்படுதலானும் உவமத்திற்குரிய நிலைக்களங்கள் ஐந்தனுள் ஒன்றாக உவமேயத்தினைக் கொள்ளுதல் பொருங்காமையானும் இவ்வுரைத் தொடரும் இதற்கு உதாரணமாகக் காட்டப்படும் "ஒண்செங்கழுநீர்க்கண் போலாயிதழ்" (அகநானூறு-48) என வருக்தொடரும் இச்சூத்திரத்திற்கமைந்த இளம்பூரணருரையில் இடம்பெற்றுள்ளமை ஏடெழுதுவோரால் கேர்ந்த பிழையாதல் திண்ணம்,

2. உவமைக்கு நிலைக்களன்களாக முன்னைச் சூத்திரத்திற் குறிக்கப்பட்ட சிறப்பு ,கலன், காதல், வலி, என்னும் நான்குடன் இங்கு ஐந்தாவதாக எண்ணப்படுவது, பொருளின் தாழ்ந்த தன்மையாகிய இழிநிலை என்றலே பொருத்தமுடையதாகத் தோன்றுதுகின்றது, 'மேற்சொல்லப்பட்டன் உயர்வின் பகுதியாதலின் இத. னொடுங்கூட ஐக்தென்றார்” என வரும் இளம்பூரணம் உரைத் தொடரும், 'ஒரு பொருளின் இழிபு கூறுவான் . உவமத்தான் இழிபு தோன்றுவித்தலின் அதுவும் நிலைக்களமாம் என்றவாறு’ என வரும் பேராசிரியர் உரை விளக்கமும் இங்கு ஒப்புகோக்கியுனரத்தக்கனவாகும்