பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௩௪

தொல்காப்பியம் -பொருளதிகாரம்

ஒருசாராசிரியர் ரூபகம் சொல்லப்பட்டது உவமைபற்றி வருகலின் இஃது உவமையின் பாகுபாடு என்பது இவ்வாசிரியர் கருத்து.

 "இரும்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மருப்பிற
  கருங்கை யானை கொண்மூ வாக 
  நீண் மொழி மறவ ரெறிவன ருயர்த்த 
  வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த 
  குருதிப் பல்விய முரசுமுழககாக 
  அரசராப் பணிக்கும் அணங்குறு பொழுதின் 
  வெவ்விசைப் புரவி வீசுவளி யாக 
  விசைப்புறு வல்வில் வீங்குநா னுதைத்த 
  கனைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை 
  ஈரச் செறு வயிற் றேரே ராக 
  விடியல் புக்கு நெடிய நீட்டிநின் 
  செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால் 
  பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி 
  விழுத்தலை சாய்த்த வெருவரு பைங் கூழ்ப் 
  பேஎ பெற்றிய பிணம் பிறங்கு பல்போர்க் 
  கான நரியொடு கழுகுகளம் படுப்பப் 
  பூதங் காப்பப் பொருகளத் தழி இப் 
  பாடுநர்க் கீந்த பீடுடை யாளன்’              (புறம் ௩௪௬)

என வரும்.

   "பாசடைப் பரப்பிற் பன்மலரிடைநின்
    றொருதனி யோங்கிய விரை மலர்த் தாமரை 
    அரச வன்னம் ஆங்கினி திருப்பக் 
    கரைநின்றாடும் ஒருமயில் தனக்குக் 
    கம்புட் சேவற் கனைகுரன் முழவாக் 
    கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய்'
                                         (மணிமே ௪:௮.௧௩)

என்பதும் அது. இவ்வாறு வருவன வெல்லாம் இச்சூத்திரத்தாத கொள்க.

பிற்கால அணியிலக்கண நூலாரால் உருவகம் எனச் சொல்லப்படுவது உவமையனை அடிபடையாகக் கொண்டு வருதலின் அவ்வுருவகமும்  உவமையின் பகுதியாக அடங்கும் என்பதே தொல்காப்பியனார் கருத்து என்றவாறு.