பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா உடு ونی جائے

நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை வயாஅ மூர புளிங்காய் வேட்கைத் தன்று நின் மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே’’ (ஐங்குறு. 51)

என்பதும் அது. நீருறை கோழி நீலச் சேவலை அதன் கூருகிர்ப்பெடை நினைந்து, கடுஞ்சூலான்வந்த வயாத் தீர்தற் பயத்தவாகும், அதுபோல நின்மார்பு நினைந்து தன் வயவுநோய் தீரும் இவளுமென்றவாறு புளிங்காய் வேட்கைத் தென்பது, நின் மார்புதான் இவளை நயவாதாயினும் இவடானே நின்மார்பை நயந்து பயம்பெற்றாள் போலச் சுவைகொண்டு சிறிது வேட்கை தனிதற் பயத்தளாகும்; புளியங்காய் நினைய வாய்நீர் ஊறுமாறு போல என்பது. - r

“ஒன்றே னல்லெ னொன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரு நாடனொடு ஒன்றேன் தோழி யொன்றி னானே' (குறுந். 208)

என்பது மெய்யுவமப்போலி: என்னை; மிதியுண்டு வீழ்ந்த” வேங்கை குறையுயிரோடு மலர்ந்தாற்போல யானும் உளேனாயினே னென்றமையின்,

" வண்ண வொண்டழை நுடங்க வாலிழை

யொண்ணுத லரிவை பண்ணை பாய்ந்தெனக் கண்ணுறுங் குவளை நாறித் தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே (ஐங்குறு.73)

இஃது, உருவுவமப்போலி. 密 புனலாடிய ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனலெல்லாந் தண்ணென்றதெனக் கூறிய வழி, அத்தடம்போல இவள் உறக்கலங்கித் தெளிந்து தண் ணென்றாளென்பது கருதியுணரப்பட்டது; அவளொடு புனல் பாய்ந்தாடிய இன்பச் சிறப்புக் கேட்டு நிலையாற்றாளென்பது கருத்து. இது நிறமன்றாலெனின் நிறமும் பண்பாகலின் அந் நிறத்தோடு நிறமல்லாத பண்புங் கொள்ளப்படுமென்பது வகை பெறவந்த உவமத்தோற்றம்’ (தொல். பொருள். 276) என்புழிக் கூறினானென்பது.