பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம-பொருளதிகாரம் فته 35

வேறுபட்டுப் பிணங்குதலினின்றும் நீங்கிய தகுதிக் கண்ணும், தனது கொடிய புறத் தொழுக்கினைப் பொறுத்துக்கோடல் வேண் டும் என்று அடிமேல் வீழ்ந்த கணவனை இடித்துரைத்து இச்செயல் நின்பாற் காதலுடைய என் தங்கையராய பரத்தையர் காணின் நன்றாமோ எனத் தன் காதல் நிறைவு தோன்றக் கூறுந் திறத்தின் கண்ணும், தாயரை அணுகி அவர்களால் நல்ல அணிகலன்கள் அணியப்பெற்ற தன் மகனைப் பொய்ம்மையொழுக்கினளாய புரத்தை நினைத்த வழியும், தன்னிடத்துத் தோன்றிய அன்பின் சிறப்பினாலும் தலைவன் பால் தோன்றிய அயன்மைபற்றிய வேறு பாட்டினாலும் இன்னாமையைத் தரும் நிலையில் தலைவன். செய்த பழைய சூளுறவைத் தன் மனத்துக் கொண்ட நிலையிலும், தலைவனுடைய காமக்கிழத்தியின் நலத்தினைப்பாராட்டத்தொடங் கித் தலைவன் தன்னை அயன்மை செய்தொழுகுதலாகிய தீமை யின்கண் முடித்துக் கூறும் பொருளின்கண்ணும், கொடுமை விளைக்கும் தலைவனது புறத்தொழுக்கின் கண்ணே தோழி கூறு தற்குரிய கூற்றுக்களினிடையே குற்றமற்ற சிறப்பினையுடைய கற். பின் கண் திரியாது வெகுளுதலும் பாராட்டுதலுந் தீமையின் வேறு படுத்தலும் அன்பினார் பேணிக் கொள்ளுதலும் என அவ்விடத்து. வேறுபட்டுவரும் பல்வேறு நிலைமைக்கண்ணும் &アの6cmra_* வாயில்கள்பால் வ்ரும் கூற்றுவகையொடு தொகுத்து இவ்விடங் களில் தலைவி கூற்றுநிகழ்த்தல் உரிமையுடையது என்பர் ஆசிரியர் எ-று.

எ. புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந்

திடைச்சுரத் திறைச்சியும் வினையும் சுட்டி அன்புறு தக்க கிளத்தல் தானே கிழவோன் செய்வினைக் கச்ச மாகும்.

இளம்பூரணம் : என்-எனின், இதுவும் தலைமகட்குரிய கிளவிக்கட்படும் இலக்கணம் நுதலிற்று.

(இ - ள்.). களவிற்புணர்ந்து உடன்போகிய தலைமகள் கற்புக்கடன் பூண்டொழுகுங் காலத்து மனைக்கணிருந்து தான் முன்னர் இடைச்சுரத்தில் தலைவனுடன் கண்ட கருப்பொருண் முதலியவற்றையும் அவற்றின் தொழிலையும் குறித்துக் கிழவன்