பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா க 磷r@了

புறம்படு விளையாட்டுப் புல்லிய புகர்ச்சியும் என்பதுபுறப்பட்ட விளையாட்டினைத் தலைவன் பொருந்திய புகர்ச்சிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. புகர்ச்சி-குற்றம். 'காலையெழுத்து.....பிறத் தல்லே' (குறுந்: 45) என வரும்.

சிறந்த புதல்வனைத் தேராத புலம்பினும்: என்பது-இரு வர்க்குஞ் சிறந்த புதல்வனை நினையாமையால் தலைமகன் தனிமையுறுதற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு,

'நெடுநா......பிறந்த மாறே’’ (நற்றினை. 40) எனவும்

  • நூண்ஞாண்......தொடுத்து’’ (ஐந்திணையெழு. 94)

எனவும் வரும்.

மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் என்பது-நீ கொண்ட நலத்தினைத் தந்துபோ எனக் கூறுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. -

'விட்டென......உண்டவென் நலனே' (குறுந் 236)

என வரும்

பேணா வொழுக்கம்’ நாணிய பொருளினும் என்பது -தலைமகனைப் பேணாத ஒழுக்கத்தினால் தலைமகள் நாணிய பொருண்மைக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

1. புறம்படுவிளையாட்டு: என்றது, தலைவன் பாறும் குளலும் காவு மாடிப் புறத்தே சென்று பரத்தையரொடு விளையாடும் விளையாட்டினை புல்லுதல்-பொருந்துதல். புகர்ச்சி-குற்றம், புகர், புகர்ச்சி என்றாயிற்று.

2. தேராது புலம்புதல்-தேர்ந்து வெளிப்படச் சென்று காண இயலாமையால் தனிமையுற்று வருந்துதல். .

.ே 'பேனா வெர்.ழுக்கம் என்றது. தலைவன் தனக்குரிய பெருமையும் உரனும் முதலிய பண்புகளைப் பேனா து மேற்கொண்ட புறத்தொழுக்கத்தினை தலைவனது பேணா வொழுக்கத்தினையெண் ணித் தலைவி காணினாள் என்பார், பேணாவொழுக்கம் காணியபொருளிலும் என்றார்.

பிறர் பழியுக் தம்பழியும் கானுவார் கானுக்

குறைபதி யென்னும் உலகு என வரும் திருக்குறள் இத்தொல்காப்பியத் தொடர்ப்பொருளை அடியொற்றி

யமைங்ததாகும்.