பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா சு. - வல்க

பிரியுங்காலை யெதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்பட என்பது-தலைவன் சேயிடைப் பிரியுங் காலத்து முன் னின்து சொல்லிய் மரபுடை மாறுபாடும் என்றவாறு,

எனவே, அகத்தினையியலுட் கூறப்பட்டது களவு காலத்தை நோக்கிக் கூறுதலான் அயலிதாகக் கூறப்பெறும் என்பது உம் இவ்வோத்தினுட் செலவழுங்குவித்தல் பார்ப்பார்க் குரித்தாகக் கூறுதலானுங் கற்பினுட் பிரிவு மரபு கெடாமற் கூறவேண்டும் என்பது உங் கருத்து. மரபினாற் கூறுதலாவது குற்றேவல் முறைமையாற் கூறுதல். பிரிவை அகத்திணையியலுள் வைத்ததனான், ஆண்டுக் கூறிய கிளவி இருவகைக் கைகோளிற் கும் பெரும்பான்மை யொக்கும் எனக்கொள்க, உடன்போக்கும் ஒக்குமோ எனின், கற்பினுள் உடன்போக்கு உலகியலுட் பெரும்பான்மையென்று கொள்க. இக்கூற்றுத் தலைமகன் மாட்டுந் தலைமகள் மாட்டுமாம். - -

'அறனின்றி. טיא אי אי 4רט אי יי கானத் தகைப்ப செலவு” (கலித். கூத் என வரும்.

இனித் தலைமகட்குக் கூறியதற்குச் செய்யுள்:

'அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிறிதாற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர்' (திருக்குறள் தளசு) என வரும்

- பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந் தோழிக்குரிய வென்மனார் புலவர் என்பது-மேற்சொல்லப்பட்ட கிளவியன் றிப் பிற வாய்பாட்டாற் பாகுபடவந்த கிளவி யெல்லாந் தோழிக் குரிய என்றுரைப்பர் புலவர் என்றவாறு.

- வகைபடவந்த கிளவியாவன :-பிரிந்த தலைமகன் வருவ னெனக் கூறுதலும், பருவங்கண்டு கூறுதலும், வற்புறுத்தலும், திமித்தங்கண்டு கூறுதலும், வத் தான் எனக் கூறுதலும், இந்நிகரன

1. அகத்தினையியலிற் கூறப்படும் கிளவிகள் களவு கற்பு என்னும் இரு லகையொழுகலாறுகட்கும் பொதுப்பட அமைந்தன. அவ்வியலிற் கூறப்பட்ட பிரிவுகளுள் அயலிடமாகிய அணிமைக்கப் பிரியும் பிரிவு களவொழுக்கத்திற்குரியது. இங்குக் கூறப்படும் சேய்மைக்கட் பிசிவு கற்புக்காலத்திற்குரியதாகும்.