பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா , ால்டு

மாகிய இன்பம் நுகர்தற்குந் தலைவியை மறந்து ஒழுகினும்:

கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிறுந்

தேர்வண் கோமான் தேனுர ரன்னவிவன் நல்லணி நயந்து நீ துறத்தலின் பல்லோ ர றியப் பசந்தன்று துதலே.’’ (ஐங்குறு. 55)

இதனுள் , துறத்தலினெனப் பொதுவாகக் கூறினாள் அற முதலியவற்றைக் கருதுதலின். -

அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் . புறத்து ஒழுக்கத்தை உடைய னாகிய தலைவன் மாட்டு மனம் வேறுபட்ட தலைவியைப் புறத்து ஒழுக்கமின்றி நின்மேல் அவர் அன்புடையரென அவ் வேறுபாடு நீங்க நெருங்கிக் கூறுதலையுடைத்தாகிய பொருளின் கண்ணும் :

"செந்நெற் செறுவிற் கதிர்கொண்டு கள்வன்

தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற் கெல்வளை ஞெகிழச் சாஅய் - அல்ல லுழப்ப தெவன் கொ. லன்னாய்.” (ஐங்குறு. 27}

இதன் உள்ளுறையா ற் பொருளுணர்க.

பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்2 - பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து அகனகர் புகுதாது புறத்திருந்த தலைவனை மிகக் கழறிச், சில மொழிகளைக் கூறி, இதனானே தலைவி மனத்தின் கண் ஊடல் நீங்குந் தன்மை உளதாக்கிக் கூட்டும் இடத்தும் :

1. அடங்கக் காட்டுதலாவது, புறத்தொழுக்கமின்றி கின்மேல் அன்புடை. :ார் எனத் தலைவிக்கு ஏ துக்காட்டித் தெளிவித்தல்.

அடங்கா ஒழுக்கத்தவன்-புறத் தொழுக்கமுடையனாகிய தலைவன்.

2. பிழைத்து - தவறு செய்து கெருங்குதல்-இடித்துக்கடறுதல், இழைத்த லாவது, தலைவனது தவற்றினை மறக்கும் கிலையில் நுண்ணிய சொற்களால் கயம்படவுரைத்தல்.

ஆக்கிக் கொடுத்தலாவது, தலைவி தன் மனத்திற்கொண்ட ஊடல் நீங்கி புனருந் தன்மையினையுளதாக்கித் தலைவனைத் தலைவிக்கு உரியனாகக் கொடுத்தல்.